அவரைப் பற்றிக்கொள்வீர்களாக!

தலைப்பு வசனம்

அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக. You shall walk after the Lord your God and fear Him, and keep His commandments and obey His voice; you shall serve Him and hold fast to Him. Deuteronomy 13:4

உண்மை சம்பவம்

ஆங்கிலேயத்தின் (இங்கிலாந்தின்) முக்கிய ஆறு தேம்ஸ். இந்த ஆற்றோரத்தில் ஜோநாதான் என்ற ஒரு ஏழை மனிதன் வாழ்ந்து வந்தார். இவர் பக்தியுள்ள மனிதர். நாள்தோறும் 4 விசை ஜெபிப்பார். இவருடைய மனைவி மரியா, மகன் எட்வின் என்பவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். ஆற்றோரத்தில் ஒரு சிறு தோட்டம் இவருக்கு சொந்தமாக இருந்தது. மாலை வேளைகளில் மீன்பிடிக்க போவார்.

பல நாட்கள் வெறும் கையாய் திரும்பி வருவதுண்டு. அப்போதெல்லாம் அவர் ஜெபம் இவ்வாறு இருக்கும். “இன்றையநாளை விட அதிக மேலானதை நாளைக்காக வைத்திருப்பதற்காக தேவனே உமக்கு நன்றி!”. அப்பா இவ்வாறு ஜெபிப்பதை கேட்கிற மகன் அப்பாவிடம் ”அப்பா, நாளைக்காக தேவன் நமக்கு என்ன வைத்திருக்கிறார்?” என்பதாயிருக்கும். அப்பாவின் பதில் “எட்வின், நாம் நினைப்பதைவிட அதிகமாக தேவன் நமக்கு தருவார். அதனால் அது என்னவாக இருக்கும் என்று நாம் எதிர் பார்க்கக்கூடாது. ஏனென்றால் அது தேவனின் கொடை. அது விலையேறப்பெற்றது.” என்பார்.

ஆறு வழிந்து ஒழுகும் போதெல்லாம் நாற்காலிகளும் மரங்களும் தண்ணீரில் மிதந்து வரும். ஜோநாதன் அதை எடுத்து பத்திரப்படுத்தி உடையவர்களுக்கு திரும்ப கொடுப்பார்.

அவரைப் பற்றிக்கொள்வீர்களாக!
அவரைப் பற்றிக்கொள்வீர்களாக!

ஒருநாள் இரவில் அழுகை சத்தம் கேட்டு போய் பார்க்கும்போது ஒரு மரத்தைப் பிடித்துக் கொண்டு மிதந்து வந்த ஆட்டைப் பார்த்தார். எட்வின் கேட்டார், “அப்பா, யாரும் இதை தேடிவராமல் இருந்தால் எனக்கு சூப் போட்டு கொடுப்பீர்களா?” அதற்கு அப்பா “இல்லை மகனே இதன் சொந்தக்காரர் வருவார். ஒப்படைத்து விடுவேன்” என்றார். சில நாட்களுக்குப் பின் ஒரு வயது முதிர்ந்த தாய் தன்னுடைய ஆட்டை தேடி வந்தாள். ஜோநாதன் அதை திரும்ப கொடுத்தார். மிகுந்த மகிழ்ச்சியால் அந்த தாய் அவர்களை ஆசீர்வதித்து கூறினாள். “மகனே, இந்த நற்செயல்களுக்கு தேவன் உனக்கு பிரதிபலன் தருவார்.”

நாட்கள் கடந்தது. தேசம் முழுவதும் பெரிய காற்றும் மழையும் வரத் தொடங்கியது. ஆறு மிக அதிகமாக கரை புரண்டு ஓடியது. ஜோநாதனுடைய தோட்டமெல்லாம் தண்ணீரில் மூழ்கியது. உணவு கிடைக்காத பஞ்சம் உண்டாயிற்று. மாலை ஆனதும் எட்வின் பசியினால் அழுதான்.

தன் மகனை அனைத்து பிடித்து ஜோநாதனும் மரியாவும் கைகோர்த்து ஜெபித்தனர். “நாளை நேற்றைய தினத்தை விட அதிகமாக எங்களை போஷிக்க வல்ல தேவனே, எங்கள் குழந்தையின் பசியை ஆற்றும்” என்று ஜெபித்தனர். விடியற்காலம் 3 மணி, யாரோ கதவை தட்டுகின்ற குரல் கேட்டு ஜோநாதன் எழும்பினார், கதவு திறந்ததும் சூட், கோட் அணிந்த ஒரு பெரியவர் முன் நின்றார். “நான் ஒரு வியாபாரி. வடக்கு பகுதியிலிருந்து கப்பலில் வருகிறேன். காற்றும் மழையும் என்னுடைய படகை கவிழ்த்து விட்டது. பாய்க்கப்பலை கரையோரத்தில் கட்டியிருக்கிறேன்.

அதிலுள்ள பொருட்களை வெளியில் எடுக்க, உதவ வேண்டும்” என்றார், ஜோநாதன் உதவினார். இருவரும் பொருட்களை வெளியில் எடுக்கும்போது ஜோநாதன் பேசினார். ”நான் இதை பத்திரமாக வைத்து நீங்கள் திரும்பி வரும்போது தந்துவிடுகிறேன்” என்றார். ஆனால் வியாபாரி, ”இது ஒன்றையும் எனக்கு தர வேண்டாம். நீங்கள் பயன்படுத்துங்கள். ஆற்றிலே எறிந்து போடலாம் என்று எடுக்கும் போது யாரோ என் கையை தடை பண்ணினார். சுற்றிலும் முற்றிலும் பார்த்தபோது தான் இந்த வீட்டின் வெளிச்சம் தெரிந்து நான் இங்கே கடந்து வந்தேன். நான் விடியும்முன் பட்டணத்தில் போய் சேர வேண்டும். நன்றி” என்று சொல்லி விடைபெற்றார்.

காலையில் எழும்பி வந்த எட்வின் வீட்டு வராந்தாவில் இருக்கும் பெட்டிகளை திறந்து பார்க்கின்ற அப்பாவை பார்த்தான். ”இது என்ன?” என்று கேட்டபோது அவன் கையில் ஒரு சிறிய டப்பாவை கொடுத்து, ”இது ஆட்டுக்கறி அம்மாவிடம் கொடுத்து சூப் போடச்சொல். தேவன் மேலானதை தருவார் என்று சொன்னேன் அல்லவா? இதுதான் தேவன் நமக்காக அனுப்பின கொடை. அரிசி, கோதுமை, மீன், கறி, கம்பிளி எல்லாம் உள்ளது. தேவனுக்கு நன்றி கூறு. இதை விட மேலானதையும் தேவன் நமக்கு தருவார்.” என்றார். எட்வினுடைய கண்கள் மகிழ்ச்சியால் நிறைந்தது.

(நன்றி: எழுச்சிக் குரல்)

சம்பவ விளக்கம்

அவரைப் பற்றிக்கொள்வீர்களாக

அன்பார்ந்தவர்களே,  நலமாகத் தோன்றுகிறதை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள், அல்லது உலகம் அவற்றை உங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளும். நலமான எவற்றிற்கும் எதிராக இடைவிடாமல் போராடுகிற பகைவனாக சாத்தான் இருக்கிறான். ஆதாமுக்கும், ஏவாளுக்கும் தேவன் கொடுத்த நலமானதை அவன் கண்டபோது, அதை அவர்களிடமிருந்து அகற்ற அவன் உறுதி கொண்டான். தாவீது அரசன் தேவனைப் பிரியப்படுத்துகிறவனாய் இருப்பதை அவன் கண்டபோது, தேவனோடு தாவீது கொண்ட உறவை அழிக்க அவன் முயற்சித்தான். உங்கள் வாழ்க்கையில் உள்ள நலமானதை ஒருபோதும் எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் அவற்றை கடந்த ஞாயிறு தேவ செய்தியில் கேட்டது போல இறுகப்பற்றிக் கொள்ளவில்லையானால், ஒரு வேளை நீங்கள் அவற்றை இழந்துபோகக்கூடும்!

நீங்கள் பயிற்சி செய்கிற நலமானவைகளுக்கு, மக்கள் சவாலாக இருப்பார்கள். உங்கள் ஒழுக்க நிலையையும், நீங்கள் குழந்தையை வளர்ப்பதையும், நீங்கள் பணத்தைச் செலவிடுவதையும் அவர்கள் குறை கூறுவதோடு, சபையிலுள்ள உங்கள் ஈடுபாட்டையும், அவர்கள் விமர்சிக்கலாம். நலமானதை கர்த்தரிடத்திலிருந்து நீங்கள் எவ்வாறு இறுகப் பற்றிக் கொள்ள முடியும் என்பதற்கான தீர்வை சத்தியம் உங்களுக்கு வெளிப்படுத்துகிறது. தீமையான எந்தக் காரியத்திலிருந்தும் விலகி நில்லுங்கள்.

நீங்கள் செய்யவேண்டியது என்ன?

தேவன் உங்களுக்காக வைத்திருக்கிறவற்றை, தீமை உங்களிடமிருந்து களவாடுகிறது. ஒரு துணைவனும் ஒரு துணைவியும், குடும்பமும் மிகப் பெரிய ஆசிர்வாதங்களாகும். ஆனால் தேவன் கொடுத்திருக்கிற நலமானதை. விபச்சாரம் என்ற தீமை உங்களிடமிருந்து களவாடிக் கொள்ளும். ஜெபம், தேவனிடமிருந்து கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான வரமாகும். எனினும் பாவம், ஜெபத்தின் வல்லமையைக் களவாடுகிறது (ஏசாயா 1:15).

நீங்கள் தீமையிலிருந்து உங்களை விலக்கிக் கொள்ளவில்லையானால், தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிற நலமான அனைத்தையும் அது! உங்களிடமிருந்து களவாடும், தேவனுடைய கட்டளைகள், உங்களைக் கட்டுப்படுத்தவில்லை, தேவனுடைய சிறப்பானவற்றை நீங்கள் அனுபவிக்க, அவை உங்களுக்கு சுதந்திரத்தைத் தருகிறது. தீமையின் ஒவ்வொரு வகையிலிருந்தும், தைரியமாக விலகிச் செல்லுங்கள். தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிற நலமான அனைத்தையும், அனுபவிக்க நீங்கள் சுதந்திரமுள்ளவர்களாவீர்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!!

Person: ஜோநாதான்

நன்றி: தரிசனக்குரல் (05.08.2018)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami