அவர்கள் ஆறுதலடைவார்கள்.!

தலைப்பு வசனம்

அவர்கள் ஆறுதலடைவார்கள்.

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். Blessed are those who mourn, For they shall be comforted. Matthew 5:4

உண்மை சம்பவம்

சில மிஷனெரிகள் குஜராத் மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்று, இயேசு கிறிஸ்துவை அறிவித்தபோது ஒரு ஏழை குடும்பத்தார் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் அவர் மீது மிகுந்த அன்பும் விசுவாசமும் வைத்திருந்தார்கள். அவர்களுக்கு கடைசியாக ஒரே ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மற்றெல்லாம் பெண் பிள்ளைகள். ஆகவே அந்தக் கடைசி மகன் மீது எல்லாரும் மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். அவன் பெயர் ‘கிஷான்’ என்பது.

ஒருநாள் அந்தச் சிறிய மகன், மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு அந்தக் கிராமத்திலுள்ள மற்ற சிறுவர்களோடு சேர்ந்து ஒரு குளத்தில் நீச்சலடித்து விளையாட்க் கொண்டிருந்தான். திடீரென்று கிஷானைக் காணவில்லை. அவன் அந்தக் குளத்தில் மூழ்கி விட்டான். மற்ற சிறுவர்கள் எல்லாரும் சேர்ந்து அவனைத் தேடியும், காணாதபடியினால் ஊருக்குள் சென்று பெரியவர்களை அழைத்து வந்தார்கள். நீச்சல் தெரிந்த் சிலர், அந்தக் குளத்திற்குள் இறங்கி அவனைத் தேட ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கழித்து அவனைக் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தார்கள். அனால் அவன் அந்தக் குளத்திலிருந்த சகதியில் அகப்பட்டு மரித்துப் போயிருந்தான்.

அவனுடைய தாயும், சகோதரிகளும் மிகவும் அழுதார்கள். தகப்பனார் அருகிலிருந்த ஒரு பட்டணத்திற்கு வேலைக்காக சென்றிருந்தார். அந்தத் தகப்பன் அந்த மகனை அதிகமாக நேசித்திருந்தார். நடந்த சம்பவத்தை அவரிடத்தில் போய் சொல்ல ஆள் அனுப்பினார்கள். ஆனால் அவர் எங்கு வேலைக்கு போயிருக்கிறார் என்று தெரியாதபடியினால், அவரைக் கண்டுபிடித்து தகவலை சொல்ல முடியவில்லை. அதற்குள் இரவு நேரமாகிவிட்டபடியினால் மறுநாள் காலையில் ஆராதனை வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார்கள். அன்று இரவில் பக்கத்து வீட்டாரெல்லாம் கொஞ்ச நேரம் அவர்களோடு கூட இருந்து அந்தக் குடும்பத்தாரை ஆறுதல் படுத்திவிட்டு அவரவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றார்கள்.

அவர்கள் ஆறுதலடைவார்கள்.!
அவர்கள் ஆறுதலடைவார்கள்.!

அப்பொழுது அந்த வீட்டார் தனித்து விடப்பட்டார்கள். மகனின் உயிரற்ற சடலம் வீட்டிற்குள் வைக்கப்பட்டிர்ந்தது. திடீரென்று அந்த தாயாருக்குள் ஒரு விசுவாசம் உண்டாயிற்று. “மரித்த லாசருவை உயிரோடு எழுப்பிய இயேசு கிறிஸ்து ஏன் என் மகனையும் உயிரோடு எழுப்பக் கூடாது? அவரால் என் மகனை உயிர்பெறச் செய்ய முடியும்” என்று விசுவாசித்தார்கள். தன் பெண் பிள்ளைகளைப் பார்த்து “லாசருவை உயிரோடு எழுப்பிய இயேசு கிறிஸ்துவினால், நம்முடைய கிஷானையும் உயிரோடு எழுப்ப முடியும். நாம் அதற்காக ஜெபிப்போம்” என்று சொல்லி அந்தப் பையனின் அருகில் முழங்கால்படியிட்டு ஜெபிக்க ஆரம்பித்தார்கள்.

”லாசருவை உயிரோடு எழுப்பிய இயேசுவே, எங்கள் கிஷானையும் உயிரோடு எழுப்பும்” என்று சொல்லி விசுவாசத்தோடு ஜெபித்தார்கள். ஒருமணி நேரம்.. இரண்டு மணிநேரம் கடந்தாலும் விசுவாசத்தோடு ஜெபித்துக் கொண்டே இருந்தார்கள். நடு இரவு நேரத்தில் திடீரென்று அவனுக்குள் ஜீவன் திரும்ப வந்தது. அவன் உயிரோடு எழுந்து உட்கார்ந்தான். “பசிக்கிறது, எனக்கு சாப்பாடு வேண்டும்” என்று கேட்டான். அந்த இரவில் அவனுக்கு ரொட்டி செய்து கொடுத்தார்கள்.

பாருங்கள்! எத்தனை பெரிய சந்தோஷமும் அந்த வீட்டில் வந்திருக்கும்! மறுநால் காலையில் அடக்கத்திற்காக ஊர் மக்கள் கூடி வந்தால் கிஷான் உயிரோடு இருக்கிறான். “என்ன நடந்தது? இவன் எப்படி உயிரோடிருக்கிறான்?” என்று அவர்கள் கேட்டபோது, இயேசு கிறிஸ்து செய்த அற்புதத்தை அவர்களுக்குச் சொன்னார்கள். அந்த கிராமமே மகிழ்ச்சியடைந்தது. அந்த அற்புதத்தின் நிமித்தமாக அந்தக் கிராமத்திலிருந்த அத்தனை குடும்பங்களும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டன.

(நன்றி: இயேசு விடுவிக்கிறார்)

சம்பவ விளக்கம்

அவர்கள் ஆறுதலடைவார்கள்.

அன்பார்ந்தவர்களே,  வாழ்க்கை முழுவதும் ஏற்றத்தாழ்வு நிறைந்தது. அநேக வேளையில் நாம் மனதுயரம், சோர்வு, ஏமாற்றம், தனிமை இவைகளை உணருகிறோம். அதிகமாக நாம் நம்புகிற நம் நெருங்கிய நண்பர்களும் சில வேளைகளில் நம்மை விட்டு தூரமாய் நிற்பார்கள். அந்த தருணங்களில் யாராவது நம் தோளில் கை போட்டு நண்பனே, கவலைப் படாதே. நான் உன்னுடனே இருக்கிறேன். நான் உன்னை நேசிக்கிறேன். நீ கடந்து செல்லுகிற நிலைமை எனக்கு புரிகிறது.

நான் உங்கள் நண்பன். நான் உங்களை ஒருநாளும் கைவிடமாட்டேன்” யார் இப்படி சொல்லுவது என்று உங்களால் சொல்ல முடியுமா? ஆம் அவர் தான் பரிசுத்த ஆவியானவர். அநேக சந்தர்ப்பங்களில் நாம் இதை அனுபவித்திருக்கிறோம். கடந்த ஞாயிறு தேவசெய்தியில் கேட்டது போல பரிசுத்த ஆவியானவரே நமக்கு கண்ணுக்கு புலப்படாத நண்பனும் தோழனும் நடத்திச் செல்லுகிறவரும், உதவிசெய்கிறவரும், தேற்றரவாளனுமாக இருக்கிறார். பரிசுத்த ஆவியானவரே நம் வாழ்க்கையில் தொல்லைகளை நீக்கி மனநிறைவை தருகிறார். அவர் நம்மை நம்முடைய கவலைகள் துன்பங்கள், வேதனைகளிலிருந்து விடுவிக்கிறார்.

நம்முடைய எல்லா தேவைகளையும் நிறைவு செய்ய வல்லவராயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நமக்கு பெலத்தையும், நம்பிக்கையையும் இரக்க உணர்வையும் தருகிறார். 2 கொரி. 1:4ல் “எங்களுடைய எல்லா உபத்திரவங்களில் தேவன் எங்களுக்கு ஆறுதலளிக்கிறார்.” ஆகையால் பிரச்சனையில் இருக்கிற மற்றவர்களை நாம் ஆறுதல் படுத்த முடியும். அதாவது நம்மை தேற்ற கர்த்தர் ஒரு தேற்றரவாளனை அனுப்பினார். எனவே நாமும் வேதனையுலும் நம்பிக்கையற்று இருப்பவர்கலுக்கு ஆறுதலளிக்க வேண்டும். உண்மையாகவே இயேசுவும் அதை தான் செய்தார். நாமும் இயேசுவின் இருதயத்தை பெற்றிருக்க வேண்டும். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!!

Person: கிஷான்

நன்றி: தரிசனக்குரல் (20.08.2017)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami