இயேசுவைப் போல மாறுவோமாக!

தலைப்பு வசனம்

தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; For whom He foreknew, He also predestined to be conformed to the image of His Son, that He might be the firstborn among many brethren. Romans 8:29

உண்மை சம்பவம்

மோதிலால் என்பவன் குடிபோதையிலிருக்கும்போது பல தீச்செயல்களைச் செய்வது வழக்கம். அவனுடைய நண்பர்கள் மேலும் மேலும் செய்யுமாறு அவனைத் தூண்டிவிட்டு மகிழ்ந்தனர். மோதிலால் ஒருநாள் உண்மைக் கிறிஸ்தவன் ஒருவன் இல்லத்தில் தற்செயலாக தங்க நேர்ந்தது. அங்கு அவனது வாழ்க்கையின் தூய்மையையும் நிறைவையும் கண்ட மோதிலால், முற்றும் மனம் மாறி தன் நடத்தையை திருத்திக் கொண்டான்.

அவனது தீய நண்பர்களுக்கோ இது சற்றும் பிடிக்கவில்லை. கிறிஸ்தவ மதத்தை தழுவியதால் தன்னை மாசுபடுத்தி கொண்டான் என்று குற்றம்சாட்டி அவனைத் துன்புறுத்தலாயினர். தான் குடிகாரனாகி பல தீமைகளை செய்தபோது தன்னைப் போற்றிக் கொண்டாடிய மக்கள், நன்மை வடிவான கிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட்டு நலமானதை நடப்பிக்கும்போது அவர்களால் தான் சிட்சிக்கப்படுவதை எண்ணி வியந்தான்.

தன் சுற்றத்தாரால் சாதி விலக்கு செய்யப்பட்டு வீட்டை விட்டு துரத்தப்பட்ட போதும் அவன் மனம் தளரவில்லை. மகிழ்வுடனே கர்த்தரைத் துதித்து அவர்களுக்காக இறைவனிடம் வேண்டினான். ஊரைவிட்டே அவன் ஓடிப்போக வேண்டிய நாளும் வந்தது. அப்போது வேறொரு ஊருக்கு அவன் செல்லும் வழியில் நதியொன்றைக் கடக்க வேண்டும்.

படகில் ஏறிக்கடக்கவிருக்கையில் பெரும் புயல்காற்று வீசி படகைக் கவிழ்த்தது. ஆண்டவரின் அருளால் அவன் நீந்திக் கரை சேர்ந்தான். அவன் எடுத்து வந்த பணப்பை ஆற்றோடு போயிற்று. ஒன்றிரண்டு ரூபாய்களே இப்போது அவன் கையில் எஞ்சியிருந்தன. காட்டு மார்க்கமாய் அவன் செல்கையில் கள்வர் அதையும் பறித்துக் கொண்டனர். உயிருள்ள அண்ணலின் புத்துயிரை அவன் பெற்றிராவிட்டால், அப்போதே உள்ளம் உடைந்து மடிந்திருப்பான். ஆனால் இயேசு தரும் அற்புத அமைதியால் அவன் உள்ளம் நிறைந்திருந்தது.

இயேசுவைப் போல மாறுவோமாக!
இயேசுவைப் போல மாறுவோமாக!

அந்த சமாதானத்தை யாராலும் பறித்துக்கொள்ள முடியாது என்று அறிந்திருந்தான். ‘எல்லாம் எடுபட்ட பின்னரும், கிறிஸ்துவில் என்னிடமுள்ள அளவிட முடியாத செல்வத்தை யாரும் எடுக்க முடியாது” என்று அவன் கூறிய போது அக்கள்வரின் கடின உள்ளங்கள் நெகிழ்ந்தன. அவர்கள் அவனிடமிருந்து பறித்துக் கொண்ட பணத்தை திருப்பிக் கொடுத்தனர். பின், மோதிலால் வேறு ஊருக்கு சென்று தன் உழைப்பினால் உயர்ந்து கிறிஸ்துவின் உத்தம ஊழியனாக வாழ்ந்தான்.

(நன்றி:அன்புமலர் வெளியீடு)

சம்பவ விளக்கம்

இயேசுவைப் போல மாறுவோமாக!

அன்பார்ந்தவர்களே,  பாவமுள்ள முதலாம் ஆதாமின் பிள்ளைகலாக நாம் பிடிவாதமும் அற்பகுணமும் கொண்டவர்களாக, தேவனுக்கு முன்பாக நம்மை மெச்சிக் கொள்ளத் தக்க எதுவும் அற்றவர்களாக, நம்பிக்கையற்ற, நிராதரவான நிலையில் இருந்தோம். ஆனால், தேவனுடைய அன்பு நமது அலங்கோலத்தை மேற்கொண்டது. கிறிஸ்துவின் மூலமாக தேவன் நாம் தமது குடும்பத்தில் பிரவேசிக்க ஒரு வழியை ஏற்படுத்தினார்.

தேவனுடைய சுவிகாரப் பிள்ளையாக (தத்துப் பிள்ளை) உங்களுக்கு புதிய அடையாளமும், புதிய நாமமும் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் இனி ஒருபோதும் ஆவிக்குரிய அனாதைகள் அல்ல. நீங்கள் தேவனுடைய மகன்களாக அல்லது மகள்களாக இருக்கிறீர்கள். தேவனுடைய குடும்பத்தின் பிள்ளைகளாக, அவருடைய முதற்பேறான குமாரனைப் போலவே நீங்களும் அவருடைய சுபாவத்தைப் பெற்றுக் கொள்ளுகிறீர்கள். அவருடைய ஐசுவரியத்தை சுதந்தரித்து கொள்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்தவர் என்பதால் விசேஷமானவர்கள் என்று நீங்கள் எண்ணிக் கொள்வீர்களானால் நீங்கள் நினைப்பது சரியே – நீங்கள் விசேஷமானவர்கள் தான், நீங்கள் சிறப்பானவர்கள்!

ஆனால் உங்களுடைய சிறப்பு, நீங்கள் ஏதோ ஒன்றை செய்து விட்டதன் காரணமாக உண்டாகவில்லை. இதை மறந்து விடாதீர்கல். உங்களை விசேஷித்தவராக செய்தவர் தேவனே. நீங்கள் செய்ததெல்லாம் தேவன் தம்முடைய பிள்ளைகளாகும் படி உங்களுக்கு கொடுத்த அழைப்பை தட்டாமல் ஏற்றுக் கொண்டது மாத்திரமே. ஆனால் தேவனுடைய பிள்ளைகலாக, கிறிஸ்துவுக்குள் இருக்கும் நீங்கள் தேவனோடு இசைந்திருப்பதால் உங்களது புதிய பரம தகப்பனுடன் உள்ள சிறப்புமிக்க உறவை அனுபவிக்கும் பாக்கியம் பெறுகிறீர்கள்.

நீங்கள் கிறிஸ்துவுக்குள் யாரென்பதை அறிந்துகொள்ளவேண்டியது எத்தனை அவசியம்? தாங்கள் உண்மையில் யாரென்பதை பற்றிய தவறான நோக்குடையவர்களாக இருப்பதினால் இன்றைக்கு எண்ணற்ற கிறிஸ்தவர்கள் தங்கள் அன்றாட நடக்கையிலே அடிக்கடி தடுமாறி விழுகின்றனர். அவர்கள் தேவனுடைய கிருபையின் உதவியால் பரலோகம் செல்ல பிரயாசப்படும் பாவிகளாக தங்களை நோக்குகின்றனர். ஆனால் எவ்வளவு தான் முயன்றாலும் அவர்களால் தங்கள் பாவ சுபாவங்களை மேற்கொண்டு வாழமுடியவில்லை. ஏன் அவர்களால் வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை நடத்த இயலவில்லை?.

நாம் செய்ய வேண்டியது என்ன ?

ஏனெனில் கிறிஸ்துவில் தாங்கள் யாரென்பதை பற்றிய தவறான நோக்குடையவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர். நாம் கடந்த ஞாயிறு தேவசெய்தியில் கேட்டது போலவும், மேற்கூறப்பட்டுள்ள சம்பவத்தில் உண்மைக் கிறிஸ்தவனின் வாழ்க்கையை கண்ட ஒரு மதுப்பிரியன் எவ்விதம் கிறிஸ்துவிணண்டை மனமாறி தேவபிள்ளையாய் வாழ்ந்ததை போலவும் நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப் படுவதினாலே பிதாவானவர் நமக்கு பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்…

பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும் போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரை தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிற எவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்” (1 யோவான் 3:1,2) தான் தேவனுடைய பிள்ளையென்ற நம்பிக்கையை கொண்டுள்ள ஒருவன் “தன்னை சுத்திகரித்துக் கொள்ளுகிறான்” – அதாவது தான் தன்னை யாராக காண்கிறானோ அதற்கேற்ற விதத்தில் நடந்து கொள்ள ஆரம்பிக்கிறான். நான் திரும்பவும் கூறுகிறேன். ஒரு நபருடைய நடத்தை அவர் தன்னை யாராக காண்கிறாரோ அதற்குச் சற்றும் பொருத்தமற்ற வகையில் தொடர்ந்து அமைவது என்பது சாத்தியமற்ற காரியம். நீங்கள் தேவனுடைய பிள்ளையைப் போல வாழவேண்டுமானால் நீங்கள் உங்களைத் தேவனுடைய பிள்ளையாக நோக்கவேண்டியது அவசியம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!!

Person: மோதிலால்

நன்றி: தரிசனக்குரல் (28.05.2017)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami