என் சாட்சி எப்படி இருக்கவேண்டும்?

தலைப்பு வசனம்

என் சாட்சி எப்படி இருக்கவேண்டும்

அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டுவந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள். Therefore they sent the ark of God to Ekron. So it was, as the ark of God came to Ekron, that the Ekronites cried out, saying, “They have brought the ark of the God of Israel to us, to kill us and our people!” 1 Samuel 5:10

உண்மை சம்பவம்

Dr.A.J.கோர்டன் என்பவர் அமெரிக்காவிலுள்ள சபைகளில் போதகராக பணியாற்றி மரித்துப்போனவர். அவர் தனது ஐம்பத்தொன்பதாவது வயதில் மரிக்கும்போது அவருடைய உதடுகள் ‘வெற்றி’ என்ற வார்த்தையை மகிழ்ச்சியோடு முணுமுணுத்தது. ஆண்டவருக்காக அவர் செய்த ஊழியம் மற்றும் கிறிஸ்துவுகுள்ளான அவரது ஆன்மீக வாழ்வும் வெற்றிகரமாகவே திகழ்ந்தது. பாஸ்டன் நகரத்திலே ஒரு பாப்டிஸ்ட் சபையிலே நீண்ட காலம் போதகராக ஊழியம் செய்தார். இந்த சபையில் அவர் போதகராக பொறுப்பேற்கும்முன் இவரிடம் சபை நிர்வாகிகள் ஒரு கேள்வியைக் கேட்டார்கள். ”ஐயா, நமது சபைகளில் நடன கேளிக்கைக்கு விரோதமாக, சூதாட்டத்திற்கு விரோதமாக, சினிமாவுக்கு விரோதமாக தங்களால் பிரசங்கிக்கமுடியுமா?”. “என்னால் அப்படி பிரசங்கிக்கமுடியும்” என்று உறுதிப்பட தெரிவித்தார் Dr.கோர்டன்.

அவரது பதிலில் திருப்தியடைந்த அவரைப் போதகராக பணியாற்றும்படி வேண்டிக்கொண்டார்கள். அவர் அந்த சபையின் போதகராக பொறுப்பெடுத்துக் கொண்ட பின் வாரங்கள், மாதங்கள் கடந்து கொண்டே இருந்தது,. ஆனால் அவரோ எந்த பிரசங்கத்திலும் கேளிக்கை நடனத்துக்கு விரோதமாகவோ, சூதட்டத்திற்கு விரோதமாகவோ, சினிமாவுக்கு விரோதமாகவோ ஒருவார்த்தையும் பேசவில்லை. நிர்வாக பொறுப்பாளர்கள் அவரிடம் வந்து கேட்டார்கள். ”ஐயா, நீங்கள் இச்சபையின் போதகராக பொறுப்பேற்று ஒரு வருடம் முடிய சில வாரங்களே இருக்கிறது. நீங்கள் எத்தனையோ பிரசங்கங்கள் செய்து விட்டீர்கள். ஆனால் சினிமா, சூதாட்டம், கேளிக்கை நடனம் இவற்றிற்கு எதிராக நீங்கள் இதுவரை ஒரு வார்த்தையுமே பேசவில்லையே. எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏன்?” என்றார்கள்.

Dr.கோர்டன் தயக்கமின்றி அவர்களுக்கு பதிலலித்தார். “எனது செய்திகளில் இயேசு கிறிஸ்துவை ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்தில் இரட்சகராக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். காரணம் ஒருவனுடைய உள்ளத்தில் வரும்பொழுது நீங்கள் குறிப்பிட்ட பாவங்களெல்லாம் அவனை விட்டு சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்துவிடும். பாவத்திற்கு எதிராக மட்டுமல்ல பாவத்தில் இருந்து விடுதலை பெறும் வழியாகவே நான் இயேசுவை மையப்படுத்தி பிரசங்கிக்கிறேன்” என்றார் கோர்டன்.

என் சாட்சி எப்படி இருக்கவேண்டும்?
என் சாட்சி எப்படி இருக்கவேண்டும்?

ஒரு ஞாயிற்றுக்கிழமை முந்தைய நாள் இரவு கோர்டன் பிரசங்கம் ஆயத்தம் செய்வதில் முனைந்திருந்தார். நீண்ட நேரமாக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தவர் களைப்படைந்து அப்படியே தூங்கி விட்டார். அவரது தூக்கத்தில் ஒரு கனவு. அந்த கனவில் ஞாயிறு காலை ஆராதனை நடந்து கொண்டிருந்தது. பிர்சங்க நேரத்தில் கோர்டன் பிரசங்க நேரத்தில் ஏறி நிற்கிறார். கூடி திரண்டிருந்த மக்கள் அவரை ஏறிட்டு பார்க்கின்றனர். அப்பொழுது அவர் முன்பின் அறியாதிருந்த ஒரு புதிய நபர் ஆலயத்திற்கு வருகிறார். அவர் முன்பகுதிக்கு வந்தபோது ஆலயத்தின் மூப்பர்களில் ஒருவர் அப்புதியவருக்கு எழுந்து தன் இருக்கையை கொடுக்கிறார். மிகுந்த ஆர்வத்தோடு அமர்ந்த அப்புதியவரின் தோற்றத்தில் பெரிய அதிகாரத்திற்கு உரிய தகுதி காணப்பட்டது. கோர்டன் அப்புதியவரால் ஈர்க்கப்பட்டார். அப்புதியவருக்காக பிரசங்கிப்பதைப்போல் அவர் உணர்ந்தார். பிரசங்கித்துக் கொண்டிருந்த அவர் ஆலய ஆராதனை முடிந்தவுடன் அப்புதியவரை சந்திக்க வேண்டுமென மனதுக்குள் தீர்மானித்தார்.

ஆலய ஆராதனை முடிந்தவுடன் ஒவ்வொருவராக ஆலயத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். கோர்டன் அப்புதியவரை சந்திப்பதற்காக ஆர்வத்தோடு முன்பகுதிக்கு வந்தார். ஆனால் அப்புதியவரை காணவில்லை. எல்லாரும் போனபின்பு சபை மூப்பரிடம் அப்புதியவரை பற்றி விசாரித்தார் கோர்டன். “ஓ!, அவரை தெரியுமே! அவர் தான் இயேசு கிறிஸ்து” என்றார் சபை மூப்பர். ”ஐயா, நான் சந்தித்து பேச முடியாமல் போய்விட்டதே” என வருத்தத்தோடு கூறினார் கோர்டன். ”அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமெ இல்லை. இயேசு கிறிஸ்து அடுத்த வாரம் ஞாயிறு ஆராதனைக்கும் இங்கு வருவார். அப்பொழுது நீங்கள் அவரை பார்த்துக் கொள்ளலாம்.” உறுதியுடன் கூறினார் சபை மூப்பர். இத்தோடு கனவு முடிந்து தூக்கம் கலைந்து விழித்தார் கோர்டன்.

அவர் கண்ட கனவு அவருள் புதிய திருப்பத்தை கொண்டுவந்தது. தனது ஒவ்வொரு பிரசங்கத்தையும் இயேசு கிறிஸ்து கவனிக்கிறார் என்பதை அவர் உணர்ந்துக் கொண்டார். அவருடைய பிரசங்கத்தில் ஒரு புதிய பாரமும் வல்லமையும் பிறந்தது. அவருடைய சபையிலும் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. இயேசு கவனித்துக் கொண்டே இருக்கிறார் என்ற உணர்வு அவருக்குள் புதிய உத்வேகத்தை தூண்டி விட்டது. மிஷனெரிகலுக்கான பயிற்சி பள்ளி ஒன்றை அவர் ஆரம்பித்தார். யூதர்கல், சீனர்கள் மத்தியிலும் அவரது ஊழியக்களம் விரிந்தது. இப்படி முனைப்புடன் உழைத்த அவர் மரிக்கும்போது வெற்றி என்று மகிழ்வோடு கூறினார்.

(நன்றி: பரிசுத்தவான்கலின் வாழ்வினிலே)

சம்பவ விளக்கம்

என் சாட்சி எப்படி இருக்கவேண்டும்

அன்பார்ந்தவர்களே,  கிறிஸ்துவின் பிரதிநிதியாக ஒருவன் ஆண்டவருக்கு முன்பாகவும் ஜனங்களுக்கு முன்பாகவும் ஒரு சிறந்த சாட்சியாக இருக்கவேண்டும். சிறந்த சாட்சி என்பது ஆண்டவருடைய குமாரனை எல்லா விதத்திலும் வெளிப்படுத்துவதாகும். ஆண்டவருக்கு பயந்து நடப்பதாலும் கெட்ட காரியங்களை விட்டுவிட்டு நல்ல காரியங்களை செய்வதினாலும் நாம் கடந்த ஞாயிறு தேவசெய்தியில் கேட்டது போல ஒரு சிறந்த சாட்சியாக விளங்கலாம்.

அதாவது ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழ்வதாகும். இரண்டாவது சமாதானத்தையே தேடி அதைத் தொடர்ந்து கொள்வது ஆகும். சங். 34:11-14, மத். 5:9 நாம் வேதத்தை படிக்கும்போது ஆண்டவர் தம்முடைய ஊழியக்காரர்களை பற்றி நல்ல சாட்சி கொடுக்கிறதை பார்க்கமுடியும். இயேசுவைப் பற்றி ஆண்டவர் சொன்னார் “இவர் என்னுடைய நேசக்குமாரன். இவரில் பிரியமாயிருக்கிறேன்” மத். 3:17. ஆபிரகாமை கர்த்தர் தனது சிநேகிதன் என்று அறிமுகப்படுத்துகிறர். ஏசா. 41:8. மோசேயை பற்றி ஆண்டவர் சொல்லுகிறார். “மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதனிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவனாயிருந்தான். என் வீட்டில் அவன் எங்கும் உண்மையுள்ளவன். ” எண். 12:3. காலேபைப் பற்றி ஆண்டவர் சொன்னார். “என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருந்து உத்தமமாய் என்னை பின்பற்றினான்” எண். 12:24. தாவீது என் இருதயத்திற்கு ஏற்றவன் என்று தேவன் தாவீதை அழைத்திருக்கிறார். அப். 13:22. ஆண்டவர் தானியேலை மிகவும் பிரியமானவன் என்று அழைத்தார். தானி. 9:23. யோபுவைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? யோபு 1:8.

நீங்களும் நானும் எப்படி? ஆண்டவர் நம்மைப் பற்றி என்ன சாட்சி கொடுப்பார். ஒருநிமிடம் இதை சிந்தியுங்கள். அவருக்கு பிரியமான குமாரனும் குமாரத்திகலுமாக நீங்கள் இருக்கிறீர்களா? அவருடைய நண்பர்களாக நீங்கள் இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் உண்மையும் தாழ்மையும் உள்ளவர்களாய் அவரை முழு இருதயத்தோடும் பின்பற்றுகிறீர்கள் என்று உங்களைப் பார்த்து தேவன் சொல்வாரா? ஆண்டவருடைய இருதயத்திற்கு ஏற்றவனாக ஏற்றவளாக நீங்கள் இருக்கிறீர்கலா? என்னுடைய பரலோக தகப்பனிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தையை கேட்க நான் அதிகம் விரும்புகிறேன். ஆம், நாம் முயற்சி செய்தால் நம்மால் முடியும். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!

Person: Dr.A.J.கோர்டன்

நன்றி: தரிசனக்குரல் (27.06.2017)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami