கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்!

தலைப்பு வசனம்

கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன். I was glad when they said to me, “Let us go into the house of the Lord.” Psalms 122:1

உண்மை சம்பவம்

அமெரிக்க உல்லாச தம்பதிகள் இரு ஜோடிகள் கொரியாவில் ஒரு புகைப்படம் எடுக்கும் கடைக்குள் தாங்கள் அந்நாட்டில் எடுத்த படங்களைக் கழுவி தயார்படுத்துவதற்காக புகுந்தனர். அப்பொழுது அக்கடையில் மாட்டி வைக்கப்பட்டிருந்த படத்தை ஒருவர் காண்பித்து சிரித்தார். மற்றவர்களும் அச்சிரிப்பில் கலந்து கொண்டனர். ஏன் சிரிக்கிறீகள் என்று அந்த கடைக்காரர் கேட்டார். அப்பொழுது அவர்கள் அங்கே சுவரில் மாட்டி வைக்கப்பட்டிருக்கும் படத்தைக் காட்டி இதைப் பார்த்து சிரித்தோம் என்றார்கள்.

அப்படம் ஒரு கிழவன் ஒரு கலப்பையை இழுத்துக் கொண்டு போவது போலவும் ஒரு வாலிபன் பின்னால் கலப்பையைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு உழுவது போலவும் உள்ள ஒருபடம். அப்பொழுது அக்கடைக்காரர் இப்படத்திற்குப் பின்னால் உள்ள சம்பவத்தை நீங்கள் அறிந்தீர்களென்றால் சிரிக்கமாட்டீர்கள் என்றார். அது என்னவென்று அவர்கள் கேட்டபோது கடைக்காரர்: “கயிற்றைப் பிடித்து இழுத்துக் கொண்டிருப்பவர் யுஸ்கோ (Yusko) என்பவர்; பின்னால் கலப்பையைத் தள்ளிக் கொண்டு போகிறவர் அவருடைய மகன். பொதுவுடைமைவாதிகள் கொரியாவை பிடிக்குமுன் யுஸ்கோ தான் எங்கள் ஊர் தலைவர்(Mayor). தன் மனைவியுடன் மூன்று பிள்ளைகளோடு இக்கிராமத்தின் கடைசியில் ஒரு நல்ல வீட்டில் குடியிருந்து நல்ல விவசாயம் செய்து குடும்பத்தை நல்ல முறையில் வந்ததுமட்டுமல்லாமல் இவ்வூரிலும் ஒரு மதிப்பு பெற்ற குடிமகனாக இருந்தார்.

அச்சமயத்தில் இங்கு ஒரு நற்செய்தியாளர் (Missionary) வந்து பணியாற்றினார். அவருக்கு யுஸ்கோ நல்ல உதவி செய்தார். அநேகர் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். ஆகையால் ஒரு தேவாலயம் கட்ட வேண்டும் என்று யவரும் விரும்பி எல்லாரும் மனமுவந்து தங்கள் தங்கள் ஊழ்தியத்திலிருந்து ஒழுங்காக ஒரு கணிசமான தொகையைக் கொடுத்து ஓர் ஆலயத்தைக் கட்டி முடித்தோம். சிறிது காலத்தில் பொதுவுடைமைவாதிகள் (Communist) இப்பிராந்தியத்தை படை எடுத்து வந்து எங்கள் ஊரையும் எங்கள் புதுக் கோயிலையும் இடித்துத் தரைமட்டம் ஆக்கினர். அந்த நற்செய்தியாளர் சிறையிலடைக்கப்பட்டார். எங்களில் அநேகர் இறந்தனர். யுஸ்கோவின் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் பொதுவுடைமைக்காரரின் கொடுமைக்குப் பலியானார்கள்.

கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்
கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்

நாங்கள் விடுதலையடைந்தபின் எங்கள் நகரக் குழுக்கூட்டம் கட்டப்பட்டது. இவ்வூரை திரும்ப எடுத்துக் கட்டுவதென்றும், வீடுகளை கட்டுமுன் நம்முடைய கோயிலைக் கட்டிவிடவேண்டும் என்றும் யுஸ்கோ கூறினார். அவரவர் முன்வந்து தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். யுஸ்கோவிற்கு இருந்ததெல்லாம் தரிசாக்கப்பட்ட நிலமும் ஒரு எருமையும்தான். அவர் தனக்குண்டான அந்த எருமையை விற்று முழு பணத்தையும் கோயிலுக்குக் கொடுத்துவிட்டார். நிலத்தை உழுவதற்கு எருமை இல்லாதபடியால் அதற்கு பதில் தான் ஏரை இழுத்து நிலத்தைப் பயிர் செய்தார். அந்த புகைப்படத்தைத் தான் நீங்கள் பார்த்து சிரித்தீர்கள் என்றார், அவர்கள் தங்கள் செயலை எண்ணி வருத்தபட்டனர்.

(நன்றி: அருளுரை உபமானங்கள்)

சம்பவ விளக்கம்

கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்!

அவருடைய சமூகத்தில் உண்மையாய் நம்முடைய நேரங்களை செலவழிக்கும் போது, நம் உள்லத்தை ஒரு புத்துணர்ச்சியும், தெய்வீக சந்தோஷமும் நிரப்புகிறது. கர்த்தர் தமது ஆசாரியர்களுக்கு கட்டளையிடும்போது, தம்முடைய ஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று சொன்னார். அவர்களை “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்கு சமாதானம் கட்டளையிடக்கடவர்” என்று சொல்லி ஆசீர்வதிக்கவேண்டும்” (எண். 6:24-26) என்றார்.

கடந்த ஞாயிறு தேவ செய்தியில் நாம் கேட்டது போல சபைகூடிவருதல் தேவனுடைய பிள்ளைகளுக்கு எத்தனை பெரிய ஆசீர்வாதத்தைக் கொண்டு வருகிறது. சபைக்கூடி வரும்ப்போது ஒருவருக்கொருவர் ஜெபிக்கிறோம். ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமக்கிறோம். ஒருவருடைய சாட்சியின் அனுபவங்கள் மற்றவர்களுக்கு பயனுள்ளதாய் மாறுகிறது. கர்த்தர் தம்முடைய ஊழியர்களைக் கொண்டு நம்மோடு பேசுகிறார். ஆலயத்தின் சம்பூரணத்தினால் நிரப்பப்படும்படி ஆலயத்திற்கு வரவேண்டும். தேவபிள்ளைகளே, ஆலயத்திற்கு வருவது உங்களுக்கு மகிழ்ச்சியின் அனுபவமாய் இருக்கட்டும். ஆலயத்தின் சம்பூரணத்தில் நிரப்படவேண்டுமென ஆவலோடு ஆலயத்திற்கு கடந்து வாருங்கள். உங்கள் தேவைகளை சந்திக்க ஆவலுள்ள தேவனைச் சந்திக்க மகிழ்ச்சியோடு வருவீர்களாக! கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!!

Person: யுஸ்கோ

நன்றி: தரிசனக்குரல் (18.03.2018)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Close Bitnami banner
Bitnami