கர்த்தர் பயங்கரமான தேவன்!

தலைப்பு வசனம்

உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார். For the Lord Most High is awesome; He is a great King over all the earth. Psalms 47:2

உண்மை சம்பவம்

இங்கிலாந்தின் அப்போஸ்தலன் என்று அழைக்கப்படும் ஜான் வெஸ்லி ஒரு குருவானவரின் (போதகர்)  மகனாக 1703 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி பிறந்தார். வெஸ்லியின் பெற்றோர் மிகச்சிறந்த ஊழியர்கள்.

ஒரு நாள் திடீரென்று அவர்கள் வாழ்ந்த வீட்டில் நெருப்பு பற்றி எரிய தொடங்கியது.  ஐந்து வயது சிறுவனான ஜான் வெஸ்லி மட்டும் தன் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தான். மற்றவர்கள் விழித்தெழும்பி வெளியே வந்துவிட்டனர். அப்போது அவருடைய தாயார் சூசன்னாள் மற்ற பிள்ளைகளை அழைத்து  முழங்கால்படியிட்டு தம்முடைய மகனை காப்பாற்ற ஜெபித்தார்.

இரண்டு பேர் ஒருவர் தோளின் மீது ஒருவர் ஏறி நின்று வெஸ்லியை குதிக்க சொல்லி கைகளில் ஏந்தி காப்பாற்றினார்கள். அவ்வேளையில் கூரையும் இடிந்து விழுந்தது.  இவ்வாறு சிறுவயதிலேயே தேவனால் காப்பாற்றப்பட்ட வெஸ்லி.

கர்த்தர் பயங்கரமான தேவன்!
கர்த்தர் பயங்கரமான தேவன்!

அவருடைய தாயார் பிள்ளைகள் பேச கற்றவுடன் முதன்முதலாக அவர்களுக்கு கர்த்தருடைய ஜெபத்தை கற்றுக் கொடுத்தார்.  காலை எழுந்தவுடனும் இரவில் படுக்க செல்லும் முன்னரும் அதை அவர்கள் சொல்ல வேண்டும். வாரத்தில் ஒரு நாள் ஒரு மணி நேரம் தன் பிள்ளைகளுடன் தனிமையில் அவர்களுக்கு ஆலோசனையும் கொடுத்தார்.

சூசன்னாள்  தம்முடைய பிள்ளைகளை தாம் மரிக்கும் முன்பு அழைத்து தான் மரித்தவுடன் ஒரு துதிப் பாடலைப் பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இப்படிப்பட்ட தாயை பெற்றிருந்த ஜான் வெஸ்லி சன்மார்க்கராய் வளர்ந்தார்.  தேவனை ஏற்றுக் கொள்ளாமலேயே தேவனுடைய ஊழியத்தை செய்ய ஆரம்பித்தார். ஒருமுறை அவர் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அந்த கப்பல் பயங்கரமான புயலில் அகப்பட்டது. கப்பலுக்கு பலத்த சேதம். மரண பயம் அநேகரை சூழ்ந்தது.  அந்த கப்பலில் இருந்த மொரேவிய மக்கள் அமைதியாக ஆண்டவரைத் துதித்துப்பாடி கொண்டிருந்தார்கள். எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் பெற்ற அவர்கள் கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்று வாழ்ந்தவர்கள். இந்நிகழ்ச்சி அவர் உள்ளத்தில் பதிந்தது.

வெளிநாட்டில் ஊழியம் செய்ய வேண்டுமென்று ஜார்ஜியாவிற்கு சென்றார்.  தம்முடைய தந்தையார் இறந்த சில நாட்களிலேயே தன் தாயிடம் அனுமதி கேட்டார்.  அப்பொழுது அவருடைய தாயார், ”எனக்கு 20 பிள்ளைகள் இருந்து அவர்கள் எல்லாரும் திரும்பவும் ஒருபோதும் சந்திக்க கூடாத இடங்களுக்கு ஊழியர்களாக மிஷனரியாக போனாலும் நான் மிகவும்  மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறினார்.

ஜான் வெஸ்லி – ஊழியம்

John wesley எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். ஆண்டிற்கு ரூபாய் 390 சம்பாதித்தபோது 364ஐ தமக்கென்று செலவிட்டு மீதி ரூபாய் 26ஐ தேவனுடைய ஊழியத்திற்கு என்று கொடுத்துவிட்டார்.  சம்பளம் அதிகமான வேளையிலும் செலவை கூட்டிக் கொள்ள வில்லை. ரூ. 1560 சம்பாதித்தபோதும் ரூ.364 செலவு செய்துவிட்டு ரூ. 1196ஐ தேவனுடைய ஊழியத்திற்கு கொடுத்துவிட்டார். ஜான் வெஸ்லியின் காலத்தில் இங்கிலாந்து மக்கள் மிகவும் துன்மார்க்கத்தில் வாழ்ந்தார்கள்.  

குடிவெறியிலும், விபச்சார பாவத்திலும் சூதாட்டத்திலும் வாழ்ந்தார்கள். கொலை கொள்ளை தலைவிரித்தாடிய நாட்கள் அது. அன்று திருச்சபை ஆவியும் இல்லாமல் அனலும் இல்லாமல் இருந்தது. மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்துக்கொண்டார்கள்.

பாவம் பெருகின இடத்தில் தேவ கிருபையும் பெருகிற்று.  ஜான் வெஸ்லியும் அவருடைய சகோதரர் சார்லஸ் வெஸ்லியும் ஆண்டவருடைய வார்த்தையை பகிர்ந்தபோது ஆலயக்கதவுகள் அவருக்கு மூடப்பட்டது.  சோர்ந்துவிடவில்லை. மக்களைத் தேடிச் சென்றார். திரளான கூட்டம் தேவ வார்த்தையை கேட்க கூடியது. வெஸ்லி தம்முடைய தேசம் முழுவதும் குதிரையில் பயணம் செய்து  ஏறக்குறைய 46 ஆயிரம் பிரசங்கங்களுக்கு மேல் செய்தார்.

மெதடிஸ்ட் சபையை உருவாக்கினார். வெஸ்லியை அநேகமுறை கொலை செய்ய முயன்றனர். அடித்து இழுத்துச் சென்றனர்.  அவரை பின்பற்றுகிறவர்கள் ஆகிய மெத்தடிஸ்ட் சபை மக்களுடைய வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால் அவர்கள் சோர்ந்துவிடவில்லை. வெஸ்லி 88 வயதிலும் தேவனுடைய ஊழியத்தை செய்தார்.  மரிப்பதற்கு சில நாட்களுக்கு முன் வரை ஊழியத்தை செய்தார்.

அவர் மூலமாய் மீட்பை, தேவனின் அன்பை கண்டவர்களில் சிலர் வெளிநாட்டிற்கு ஊழியர்களாக சென்றனர். ஏழைகளை நேசித்த வெஸ்லி அவர்களுக்கும் உதவி செய்தார்.  உலகமே என் சபை என்று கூறினார். ஆதலால் மக்களை தேடி சென்று சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கித்தார்.

(நன்றி: உலகத்தைக் கலக்கியவர்கள்)

சம்பவ விளக்கம்

கர்த்தர் பயங்கரமான தேவன்!

அன்பார்ந்தவர்களே,  தேவன் மேல் உள்ள பயமே மனுஷர்களை பாவத்தை விட்டு விலக செய்கிறது. (யாத்திராகமம் 20:20) (நீதிமொழிகள் 16:6).  தேவனை உதாரகுணமுள்ளவராகவும், சாந்தமான தாத்தாவாகவும், நினைத்துக் கொள்ளுகிறவர்கள் தங்களுடைய பாவத்தை மேலோட்டமாகவே பார்ப்பார்கள்.  அரை மனதோடு அவர்கள் தேவனை வழிபடுவார்கள். தேவனுடைய சித்தத்தின்படி அல்லாமல் தங்களுடைய சொந்த சித்தத்தின்படி அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை நடத்துவார்கள்.  ஆனால் கடந்த ஞாயிறு தேவ செய்திகள் கேட்டது போலவும் மேலே கூறப்பட்ட சம்பவத்தில் நாம் வாசித்து அறிந்து கொள்ளவும் பரிசுத்தமான கடவுளை குறித்த உண்மையான பயம், ஒரு மனுஷன் வாழுகிற வாழ்க்கையை பிரமிக்கத்தக்கதாக மாற்றி விடும்.

 பவுல் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக இருந்தபோதிலும், தேவனைக் குறித்த பயம் அவரிடத்தில் இருந்தது. அது மட்டுமல்லாமல் தன்னுடைய செயல்களின் நிமித்தம் ஒரு நாள் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்க வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருந்தார் (2 கொரிந்தியர் 5:10).  நாம் வாழும் உலகம் பயத்தை பாராட்டுவதில்லை. நம்முடைய பிள்ளைகளுக்கு தேவனை நேசிக்க கற்றுக் கொடுக்கிறோம். ஆனால் அவரைக் குறித்த பயம் இருக்க வேண்டும் என்று நாம் கூறுவதில்லை. அன்பான அதே நேரத்தில் பயத்துக்குட்படுத்தாத ஒரு தன்மையுடன் கூடிய தேவனைக் குறித்து அவிசுவாசிகளுக்கு நாம் அறிமுகப்படுத்த விரும்புகிறோம்.

ஏனெனில் இப்படிப்பட்ட ஒரு அறிமுகத்தின் மூலம் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை கவர முடியும் என்று நாம் நம்புகிறோம்.  தேவனைக் குறித்த பயத்தை நாம் விட்டுவிட்டோம் என்பதே இந்த நாளின் மிகப் பெரிய குறையாக இருக்கிறது. நம்மை நாமே இரட்சிக்கிற, மற்றும் “ நம்முடைய இருதயங்களில் வாழுகிற” ஒரு “ சிறந்த நண்பராக” நாம் அவரை உயர்த்திக் காட்டுகிறோம்.

ஆனால் நாம் அவரைக் குறித்து பயப்படுவதில்லை. நாம் அவருடைய வளர்ப்பு பிள்ளைகளாய் இருக்கிறோம் என்பதும், நாம் அவருடைய உடன் சுதந்திரர்களாய் இருக்கிறோம் என்பதும் கிறிஸ்துவின் நண்பர்களாக இருக்கிறோம் என்பதும் உண்மைதான். (ரோமர் 8:16-17, யோவான். 15:14-15).  ஆனால் நாம் அவருக்கு சரிசமமானவர்கள் அல்ல.

அவர் நம்மை மன்னித்து இருக்கிறார். ஆனால் நாம் இன்னும் அவருடைய சிருஷ்டிகள் தான். அவர் தேவனாயிருக்கிறார். ஆனால் நாம் அல்ல! தேவனுடைய கட்டளைகளை குறித்து நீங்கள் அசட்டை உள்ளவர்களாக இருந்து, உங்களுடைய பாவத்தில் இன்றும் உழன்று கொண்டிருப்பீர்களானால், நீங்கள் தேவனுடைய பிரசன்னத்தில் இருந்து முழுவதும் விலகியவர்களாக இருப்பீர்கள்.

தேவனுடைய பயங்கரமான பரிசுத்த தன்மையை குறித்து தியானியுங்கள். பரிசுத்த ஆவியானவரை உங்களுடைய வாழ்க்கையில் செயலாற்றும்படியும்,  சர்வ வல்ல தேவனுடைய தன்மையைக் குறித்து பக்திவிருத்தி உண்டாக செய்யவும், அனுமதியுங்கள் (ஏசாயா 40:12-26). தேவனை அறிவதற்கு அவரை குறித்த ஒரு ஆழ்ந்த பயம் அவசியமாகிறது. தேவன் தாமே தம்மை வெளிப்படுத்தி உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!!!

Person: ஜான் வெஸ்லி

நன்றி: தரிசனக்குரல் (02.06.2019)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami