சரியான மகிழ்ச்சி!

தலைப்பு வசனம்

சரியான மகிழ்ச்சி!

தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும். Make us glad according to the days in which You have afflicted us, The years in which we have seen evil. Psalms 90:15

உண்மை சம்பவம்

1950 ஆம் ஆண்டிலே, ரொனால்டு கோடி என்ற பேராயர் தமது மனைவியுடன் ஆஸ்திரேலியாவிலுள்ள நியூசெளத்வேல்ஸ் பகுதிகளில் ஊழியம் செய்துவந்தார். அப்போது மெதடிஸ்ட் சபையில் மூப்பராக பணியாற்றிய “சிஸ்டர் மேரி” என்ற பெண், அவர்களுடைய கூட்டங்களிலே பயன்படுத்தும்படும்படியாக அநேக சுவிசேஷக் கைபிரதிகளைக் கொண்டு வந்தாள். அந்த சமயம் பிஷப்பும் அவரது துணைவியாரும் ஸ்டேன்லி ஃப்ராட்ஷேம் எழுதிய, “விசுவாச அப்போஸ்தலன் – ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்” என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார்கள். “சிஸ்டர் மேரிக்கு” அதை வாசித்துக்காட்டிய அவர்கள், “அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்கு நாங்கள் எவ்வளவு ஆவலாயிருக்கிறோம்” என்றார்கள்.

”உங்களுக்கு அந்தப் பெண்ணைத் தெரியும்” என்றாள் சிஸ்டர் மேரி. ”தெரியாது” என்று மறுத்தார்கள் அவர்கள். சிஸ்டர்மேரி அவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கினாள். “அவளை கொஞ்சநேரமாக நீங்கள் அறிவீர்கள். அந்த பெண் நான் தான்” என்றாள். தேவனுடைய நற்செயல்களை நினைத்து மூவரும் அகமகிழ்ந்தார்கள். பரிசுத்தக் களிப்பினால் நிரம்பினார்கள். அவள் தன் சாட்சியைக் கூற ஆரம்பித்தாள். ”அது 1922ம் வருஷம். நான் இடுப்புக்குக் கீழே வாதநோயால் பாதிக்கப்பட்டு, மிகவும் கேவலமான நிலையில் இருந்தேன். அப்போது, விக்கிள்ஸ்வொர்த் எங்கள் நகருக்கு வந்து, சுகமளிக்கும் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தார். என்னுடைய சிநேகிதர்கள் வந்து என்னை அந்தக் கூட்டங்களுக்கு தூக்கிக் கொண்டு செல்ல விரும்பினார்கள். நானோ அதற்கு இடக்கொடுக்கவில்லை. எனக்கு தெய்வீக சுகத்திலே நம்பிக்கையில்லை. எனக்காக ஜெபிக்கப்படுவதில் எனக்கு விருப்பமுமில்ல.

என் நிலைமை இன்னும் மோசமானது. உண்மையில் சொல்லப்போனால், நான் மரித்துக்கொண்டிருந்தேன். கடைசியாக, அந்த ஜெபிக்கும் மனிதரை நாங்கள் வீட்டுக்கு கூட்டிவந்தால் உனக்காக ஜெபிப்பதற்கு அவரை அனுமதிப்பாயா? என்று கேட்கத் தொடங்கினர். ஒருவாறாக நான் சம்மதித்தேன். ஆனால் அவர் வரத் தாமதமாயிற்று. நான் மரித்துப்போனேன். பரலோகம் சென்றேன். இயேசுவின் முன் நிற்கும்படி அனுமதி பெற்றேன். கர்த்தராகிய இயேசு தமது சிங்காசனத்திலே அமர்ந்திருந்தார். நான் இதுவரை காணாத ஒளிப்பிரகாசம் என்னைச் சூழ்ந்துக்கொண்டது. நான் இதுவரை கேட்டிராத இசை என்னை பரம இன்பத்தில் ஆழ்த்தியது. என் இருதயம் பரலோகப் பேரின்பத்தில் திளைத்தது.

சரியான மகிழ்ச்சி!

நான் கர்த்தரை உற்று நோக்கையில், அவர் நான் வந்த வழியை நோக்கி தமது கரத்தை காட்டினார். நான் திரும்பிச் செல்லவேண்டும் எனப் புரிந்து கொண்டேன். எனக்கோ திரும்பிச் செல்ல விருப்பில்லைதான். நான் திரும்பி வந்து கொண்டிருந்தபொழுது ஒரு உரத்த குரல் கேட்டது. “மரணமே, இயேசுவின் நாமத்தினாலே நான் உன்னை கடிந்து கொள்கிறேன்.” பூமிக்கு வந்த பின்னர்தான் தெரிந்தது அது விக்கிள்ஸ்வொர்த்தின் குரல் என்று. உயிர்த்தெழு என்று கட்டளையிட்டார் அவர். என் கண்கள் திறந்தன. என்னைச் சுற்றி அழுதுகொண்டு நின்றிருந்த அனைவரும் சந்தோஷப்பட ஆரம்பித்தனர். நான் எழுந்தேன், வேறு ஆடைகள் அணிந்துக் கொண்டேன். கதவு தட்டப்பட்ட சத்தம் கேட்டது. நானே போய் கதவைத் திறந்தேன். என் மரண செய்தி கேட்டு என்னைப் பார்க்க வந்திருந்த வேத வகுப்புக் குழுவின் சிறு பெண்கள் அவர்கள். எத்தனை ஆச்சரியம் அவர்களுக்கு! எத்தனை சந்தோஷம் அவர்களுக்கு! இன்று வரை என் ஆண்டவரின் சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறேன். நான் உயிர்த்தெழுந்தது மட்டுமல்ல, என்னைப் பல ஆண்டுகளாக கட்டிவைத்திருந்த, என் சாவுக்கு காரணமான, என் நோயிலிருந்தும் பூரண சுகமடைந்தேன்.” இதுதான் பிஷப் அவர்கள் கேட்ட அந்தப் பெண்ணின் நேரடி சாட்சி. இதுதான் விக்கிள்ஸ்வொர்த்தின் புதிய ஏற்பாட்டு விசுவாசம்.

(நன்றி: ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்)

சம்பவ விளக்கம்

அன்பார்ந்தவர்களே,  ”எங்களை மகிழ்ச்சியாக்கும், எங்களை மகிழ்ச்சியாக்கும்” என்பதே ஆயிரமாயிரமான மக்களின் இருதய குமுறலாய் இருக்கிறது. துன்பத்திலும், துக்கத்திலும், இருளிலும் வாடுகிறவர்கள் மகிழ்ச்சியின் ஒளிக்காக ஏங்காமல் இருப்பார்களோ? அன்று தேவனுடைய மனுஷனாகிய மோசே கர்த்தரிடத்தில் இருதயத்தை ஊற்றி ஜெபித்த ஜெபம்தான், எங்களை மகிழ்ச்சியாக்கும் என்பதாகும். சாதாரணமாக மகிழ்ச்சியாக்கும் என்று அவர் சொல்லாமல் “நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்குத் தக்கதாக எங்களை மகிச்சியாக்கும்” என்று கேட்டு ஜெபித்தார். தேவபிள்ளைகளே, கர்த்தர் நிச்சயமாகவே உங்களை மகிழ்ச்சியாக்குவார். கடந்த ஞாயிறு நாம் கேட்ட இவ்வருட வாக்குத்தத்தமான தேவசெய்தியிலும், மேலே நீங்கள் வாசித்த சம்பவத்தில் கண்ட மரித்து உயிர்த்தெழுந்த சகோதரி மேரி சாட்சி கூறியபோது இருந்த மகிழ்ச்சியைப் போலவும் உங்களுடைய கண்ணீர் ஆனந்த களிப்பாய் மாறும். உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும். நீங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்குத் தக்கதாக மகிழ்ச்சியான வருஷங்களைக் காண்பீர்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!!

Person: ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்
நன்றி: தரிசனக்குரல் (06.01.2019)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Close Bitnami banner
Bitnami