திடன்கொள்ளுங்கள்! பலன் உண்டு!

தலைப்பு வசனம்

திடன்கொள்ளுங்கள்! பலன் உண்டு

நாற்பது வருஷம் சென்றபின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி: நான் கர்த்தருக்குப் பண்ணின என் பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படிக்கு நான் போக உத்தரவுகொடும். Now it came to pass after forty years that Absalom said to the king, “Please, let me go to Hebron and pay the vow which I made to the Lord. 2 Samuel 15:7

உண்மை சம்பவம்

கேரளாவில் உள்ள பத்தினம் திட்டா என்ற மாவட்டத்தில் பிறந்த இவர் சாது கொச்சு உன்னி என அழைக்கப்பட்டார். பிறந்த வருடம் 1883 . 11 வது வயதில் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார், 20 வயதில் தகப்பனையும் தாயையும் இழந்து வாழ்வை நகர்த்துவதற்கு சிரமப்பட்ட இவர் விவசாயம் செய்து தனது பிழைப்பை நடத்தினார். வயலில் வேலை செய்துவிட்டு வந்து இரவில் ஊழியம் செய்வாராம். வெள்ளை உடை மட்டும் அணிந்த இவர் மிகவும் எளிமையான தோற்றமும் தீர்க்கமான பார்வையும் உடையவராக விளங்கினார். எப்போதும் வேதத்தை தியானித்து கொண்டும் ஜெபித்து கொண்டும் இருப்பாராம். வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர் தனது பிரசங்கங்களில் கதைகள்,எடுத்துக்காட்டுகள் என கேட்பவருக்கு சத்தியத்தை தெளிவாக கூறுவாராம். தேவனிடத்தில் ஆலோசனையை நாடித்தான் பல காரியங்களை நடப்பிப்பாராம்.

1920 களில் கேரளாவில் உண்ண உணவு கூட சரியாக கிடைக்காமல் கஷ்டத்தின் மத்தியில் தேவ ஊழியம் செய்தவர்களில் சாது கொச்சு உன்னி உபதேசியும் ஒருவர். குடும்பத்துடன் பட்டினி பசியோடு, பல ஊர்களுக்கு நடந்து சென்று ஊழியம் செய்து வந்தார்.இந்த கஷ்ட நேரத்தில் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தங்களுக்கே சாப்பிட்டிற்கு வழியில்லாத நிலையில், குழந்தையை எப்படி வளர்ப்பது என்ற கேள்வி எழுந்தாலும், எல்லாவற்றையும் கர்த்தர் பார்த்துக் கொள்வார் என்ற விசுவாசம் மனதை தைரியப்படுத்தியது.நாட்கள் கடந்தது. ஆனால் அவர்களின் வாழ்க்கையில் இருந்த கஷ்டம் மட்டும் மாறவே இல்லை. ஊழியத்திற்கு செல்லும் போது கிடைக்கும் எளிய உணவு வகைகளை கொண்டு வந்து சாப்பிட்டு வந்தனர்.

குழந்தைக்கு சரியான உணவு அளிக்க முடியாத காரணத்தால், சில நாட்களில் அதன் உடல்நலம் பாதிக்கப்பட்டது.அதை மருத்துவமனைக்கு எடுத்து செல்லவும், சாதுவிடம் பணம் இல்லை. வேறு கதியில்லாத நிலையில், கர்த்தரையே நம்பி ஜெபிக்க துவங்கினர். நாம் ஒன்று நினைக்கும் போது, தேவனுடைய திட்டம் வேறாக இருக்கும் என்பது போல, சாதுவின் ஜெபம் கேட்கப்படவில்லை. சில நாட்களில் குழந்தை இறந்தது.இதில் மனமுடைந்து போன சாதுவின் மனைவி லேசாக மனநிலை பாதிக்கப்பட்டார். தேவனுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு ஊழியம் செய்து, நமக்கு கிடைத்த பலன் இதுதானா? என்று கூட மனதில் கேள்வி எழுந்தது. ஆனால் அந்த அவிசுவாச எண்ணங்களை மனதில் வளரவிடாமல் தடுத்த சாது, தனது குழந்தைக்கு அடக்க ஆராதனை நடத்தினார்.துக்கம் தாங்க முடியாமல் வீட்டிற்கு வந்த அவர், தேவ சமூகத்தில் கண்ணீரோடு ஜெபிக்க துவங்கினார். அப்போது இயேசுவின் பாடுகள், அவர் முன் வந்தது. எனக்காக பாடுபட்ட இயேசுவிற்காக, நான் ஏன் பாடுபட கூடாது என்று மனதில் தைரியம் அடைந்தவராக…“துக்கத்தின்டே பானப் பாத்திரம்கர்த்தாவென்டே கையில் தந்தால்சந்தோஷத்தோடு அது வாங்கிஹாலேலுயா பாடிடும் ஞான்”என்ற இந்த பாடலை பாடியுள்ளார்.

திடன்கொள்ளுங்கள்! பலன் உண்டு!
திடன்கொள்ளுங்கள்! பலன் உண்டு!

இந்த பாடலின் பொருள் என்னவென்றால், “துக்கத்தினால் நிரம்பிய பாத்திரத்தை தேவன் என் கையில் அளித்தாலும், அதை சந்தோஷத்தோடு பெற்றுக் கொண்டு, அல்லேலுயா என்று கூறுவேன் என்பதாகும்.இந்த பாடல் கேரளாவில் மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளிலும் இன்றும் தியானித்து பாடப்படும் ஒரு பாடல் ஆகும். இவ்வளவு கஷ்டங்களின் மத்தியில் சாது செய்த ஊழியத்தின் விளைவாக, இன்று கேரளாவில் கிறிஸ்துவை அறியாத மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு எனலாம்.

30 வருடங்கள் தென்னிந்தியாவில் பெரிய எழுப்புதல் நடக்கும் வகையில் இவரது ஊழியம் இருந்தது. இலங்கையிலும் ஊழியம் செய்திருக்கிறார். எளிமையான உணவுப்பழக்கம், அடிக்கடி உபவாசம்,தேவைக்கு மட்டும் அத்தியாவசிய பொருட்கள் வைத்துக்கொள்வது, சுவிசேஷம் அறிவிப்பதே தலையாய கடமையாக கருதியதால் வாழ்வின் அற்ப சந்தோஷங்களையும் தியாகம் செய்தது, தாழ்மையாக இருந்து யாரிடமும் எந்த உபகாரமோ, மரியாதையோ எதிர்பார்க்காமல் வாழ்ந்தது போன்ற குணங்கள் அமையப்பெற்றது அதிசயம் தான். குதர்க்கவாதிகளும், குடிகாரர்களும் கூட இவரது பிரசங்கங்களால் மனம் மாறி ஆணடவரை ஏற்றுக்கொண்டனர்.

மலையாளத்தில் உள்ளத்தை உருக்கும் பாடல்கள், புத்தகங்கள் எழுதியுள்ளார். இன்னும் இவரது பாடல்கள் மலையாள கிறிஸ்தவ மக்கள் விரும்பி கேட்கின்றனர். இடையறாத ஊழியம், உபவாசம் என ஒடிக்கொண்டிருந்த இவரை 1945 ல் ஆண்டவர் நித்திய ராஜ்ஜியத்திற்கு அழைத்துக்கொண்டார். இவரது அடக்க ஆராதனையில் அப்போதே 2 முக்கிய பிஷப்மார், 40,000 மக்கள் கலந்து கொண்டார்களாம்.

(நன்றி: இணையதள வலைப்பதிவு)

சம்பவ விளக்கம்

திடன்கொள்ளுங்கள்! பலன் உண்டு

அன்பார்ந்தவர்களே,  கர்த்தராகிய இயேசு கொந்தளிக்கிற தண்ணீரில், யாதொரு மனித உதவியும் இன்றி, ஆதாரமாகப் பற்றி பிடித்துக்கொள்வதற்கென்று ஏதுமற்றவராக தனிமையாக நடந்துகொண்டிருந்த போதிலும் அமைதியாகவும் மனமகிழ்ச்சியுள்ளவராகவும் இருந்தார். மறுபக்கத்தில், அவருடைய பன்னிரண்டு சீஷர்களோ – அவர்களில் அநேகர் மிக அதிகமாக கொந்தளிக்கிற கடலிலும் தண்டுவலிப்பதிலும் தேர்ச்சிபெற்றவர்களும் நல்ல அனுபவமுள்ளவர்களுமாய் இருந்தபோதிலும் – அனைவரும் படகில் ஒன்றாக உட்கார்ந்திருந்த போதிலும் – சூச்சலிட்டு அலறிக்கொண்டிருந்தார்கள். கொந்தளிக்கிற கடலைத் தன்னந்தனியாக கடக்கும்படி விட்டுவிடப்பட்டவராய் இருந்த ஒரு நபர் படகில் அமர்ந்து யாத்திரை செய்துகொண்டிருந்த கூட்டத்திற்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டிக்கொண்டிருப்பதைக் காண்பது ஆச்சரியமாய் இருக்கிறதல்லவோ? இங்கு தெய்வீக அமைதிக்கும் மனித பெலவீனத்துக்கும் இடையே உள்ள மிகவும் அற்புதமான, ஆச்சரியமளிக்கக்கூடிய முரண்பாட்டை நாம் காண்கிறோம். அன்பான தேவபிள்ளைகளே, கடந்த ஞாயிறு தேவசெய்தியில் கேட்டது போல ஒரு நொடிப்பொழுதாகிலும் நாம் பயப்படுவதை நம்முடைய கர்த்தர் விரும்புவதில்லை. நாம் கர்த்தராகிய இயேசுவோடு உறுதியாய் நின்று கொண்டு வரும் சோதனைகளில் அசைக்கப்பட்டுப் போக மறுத்துவிடுவோமாக. அப்போது சோதனைகளில் அசைக்கப்பட்டுப் போயிருப்பவர்களுக்கு நாம் உதவிசெய்யக்கூடியவர்களாய் இருப்போம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!!

Person: கொச்சு உன்னி

நன்றி: தரிசனக்குரல் (03.09.2017)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami