தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்!

தலைப்பு வசனம்

தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். God stands in the congregation of the mighty; He judges among the gods.

Psalms 82:1

உண்மை சம்பவம்

அந்த நற்செய்திக் கூட்டத்தில் சலசலப்பு! சிறப்புச் செய்தியாளர் இனும் வந்து சேரவில்லை. அரசியல் கூட்டத்தைப் போல “பிரசங்கியார் இதோ வந்து கொண்டேயிருக்கிறார்” என்று ஒலிப்பெருக்கியில் அறிவித்தாயிற்று. இப்போது கூட்டத்தை எப்படி அமைதிப்படுத்துவது? பாடுவதற்கு சிறப்புப் பாடல் கைப்பிரதியும் அச்சடிக்கபடவில்லை. சமயோசித புத்தியுள்ள போதகர் மேடையில் எழுந்து வந்தார். “இப்போது நாம் ஆண்டவரைத் துதித்துப் பாடப் போகிறோம். நம் அனைவருக்கும் தெரிந்த சில பாடல்கலைப் பாடுவோம்” என்று கூறி “மகிழ்வோம், மகிழ்வோம்” எனப் பாட ஆரம்பித்தார். கூட்டத்தினரும் உற்சாகமாக இருகரம் தட்டி சந்தோஷமாக பாடினர். அதைத்தொடர்ந்து “அல்லேலூயா, கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள்” மற்றும் “இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்”, “பரிசுத்தர் கூட்டம் நடுவில்” “ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்” என பாடல்கள் தொடர்ந்தன. செய்தியாளர் தாமதமாய் வந்த குறையை அந்தப் ”பாடல் நேரம்” நிறைவாக்கிற்று.

இப்படி, கிறிஸ்தவத் தமிழ் உலகில் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லாரும் மனப்பாடமாய் தெரிந்து எல்லாராலும் உற்சாகமாய் பாடப்படும் பல பாடல்கலை இயற்றியவர், அகில உலக வானொலி ஊழியத்தின் தென் ஆசிய இயக்குனர், சகோதரர் எமில் ஜெபசிங் ஆவார். இந்திய தேசத்தின் மிகச் சிறந்த மிஷனெரி இயக்கமாகத் திகழும் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவை வித்திட்டு, உரமிட்டு, வளர்த்திட்ட ஆதிகாலத் தலைவர்களில் இவரும் முக்கியமானவர். “பாடலென்றால் எமில்” என்று கூறுமலவிற்கு இவ்வியக்க மக்கள் உற்சாகமாகப் பாட வழிவகுத்தவர். அழிந்துபோகும் கோடிக்கணக்கான இந்தியர் மீதான இவரது உள்ளத்தின் ஆத்தும பாரம், இவரது பாடல்களின் ஒவ்வொரு வரியிலும் தொனிக்கும். இனிமையான ராகங்கள் இவரது பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.

சகோதரர் எமில் ஜெபசிங் 10.01.1941 அன்று மறைத்திரு Y.C.நவமணி ஐயரவர்கலுக்கும், கிரெஸ் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். தனது வாலிப நாட்களிலே சகோதரர் P.சாம் மற்றும் சகோதரர் N.ஜீவானந்தம் என்ற தேவ வல்லமை நிறைந்த ஊழியர்கலின் வழிநடத்துதலால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளையில் தனது 17வது வயதில் ஆண்டவரின் அன்புக்கு அடிமையானார். ஏமி கார்மைக்கேல், தாமஸ் உவாக்கர், ஈசாக்கு ஐயர் போன்ற பரிசுத்த தேவ ஊழியர்கள் பணிபுரிந்த அவ்வூரிலே கிறிஸ்துவின் ரத்தத்தால் இதயக்கறை நீங்கி தூய்மை பெற்று, மிஷனெரி தரிசனத்தையும் பெற்றதால் பண்ணைவிளையை “பரிசுத்த பூமி” என இன்றும் நன்றியோடு நினைவு கூறுகிறார்.

தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்
தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்

ஆண்டவரின் கரத்தில் தன்னை அர்ப்பணம் செய்த எமில், முதலில் பண்ணைவிளையில் தன் வாலிப நண்பர்களை ஆண்டவருக்காக ஆதாயம் செய்தார். அவர்கள் அனைவரும் கூடி ஜெபித்து ஐக்கியத்தில் பெலப்பட்டனர். அந்நாட்கலில் 1959ம் ஆண்டின் பெரிய வெள்ளிக்கிழமை அன்று வழக்கம்போல ஜெபத்திற்காக இந்த வாலிபர் குழு கூடியது. அன்று சிறப்பாக தியானம் செய்த ஆண்டவரின் சிலுவைப் பாடுகளும் மரணமும் தங்கள் உள்ளத்தில் வேதனை நிறைந்த பாரமாக அழுத்த அவர்கள் அமர்ந்திருந்தனர். சோர்ந்திருந்த அவர்கள், முதலில் ஆண்டவரைத் துதித்துப் பாடி அதன்பின்னர் ஜெபிக்க விரும்பினர். அந்நிலையில் ஆவியானவர் எமிலுடன் இடைப்பட்டார். கரும்பலகை ஒன்று அந்த இடத்தில் இருந்தது, சாக்குத் துண்டை எடுத்த எமில், பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலின்படி இப்பாடலை நேரடியாக கரும்பலகையில் மடமடவென்று எழுதி முடித்தார். அவ்வேளையில் இப்பாடலின் ராகமும் எமிலின் உள்ளத்தில் சுரந்து வந்தது.

”பெரிய வெள்ளிகிழமையன்றும் என் இயேசு ஜீவிக்கிறார்! பாவ வாழ்விலிருந்து என்னை மீட்டெடுக்கக் கிரயபலியாக ஏனச்சிலுவையில் அவர் மரித்தார். ஆயினும், இதோ! சதா காலங்களிலும் உயிரோடு ஜீவிக்கிறார்! அவரை ஏற்றுக்கொண்ட என் உள்ளத்தில் இன்றும் ஜீவிக்கிறார்!” என எமில் எண்ணினார். “அவர் ஏன் என் உள்ளத்தில் ஜீவிக்கிறார்?” என்று நினைத்த எமிலுக்கு, “உன் வாழ்வில் அற்புதங்களைச் செய்வதற்கே” என்ற ஆவியானவரிஒன் பதில், வேதத்தின் அற்புதங்களை சிந்திக்க தூண்டியது. செங்கடல் திறப்பு, எரிகோ கோட்டை வீழ்ச்சி, குருடரின் பார்வை, குஷ்டரோகியின் ஆரோக்கியம் என பல அற்புதங்களை ஒவ்வொன்றாக அவரது உள்ளம் நினைவுகூர்ந்து அதுவே கரும்பலகையில் பாடலாக உருவான. இப்படலை கூடி வந்த வாலிபர்கள் அனைவரும் ஒரு சில நிமிடங்களில் கற்றனர். உற்சாகமாக பாடினர். அப்பொழுது வெள்ளிகிழமையானது, உயிர்தெழுந்து, சதாகாலமும் ஜீவித்து அரசாளும் மகிமை நிறை ஆண்டவரை அற்புத நாயகராய் ஆராதிக்கும் வேளையாய் மாறியது, சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி பெற்ற வாலிபர்கள், உற்சாகமாய் ஜெபத்தில் தரித்து நின்றனர்.

Dr.N.எமில் ஜெபசிங் (1940-2013) ஒரு தேவனுடைய பரிசுத்த தாசன். நண்பர் சுவிசேஷ ஜெப குழுவின் ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்து அதன் முழுநேர பொது காரியதரிசியாக 10 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் ட்ரான்ஸ் வேர்ல்டு ரேடியோ இந்தியாவின் முதல் இந்திய டைரக்டரும் பின்பு அதன் தென்கிழக்கு ஆசிய டைரக்டரும் ஆவார். (1978-2006) அவருடைய தலைமையின் கீழ் சுவிசேஷம் இந்தியாவின் 60க்கும் மேலான மொழிகலில் ஒலிபரப்பப்பட்டது.

2000இல் தேசிய மத ஒலிபரப்பு ஸ்தாபனம் அவருக்கு ‘அகில உலக கிறிஸ்தவ ஒலிப்பரப்பில் தனிப்பட்ட சாதனையை சாதித்தவர்’ என்ற விருதை வழங்கியது. பரலோகத்தை இந்தியர்கள் நிரப்ப வேண்டும் என்ற அவரது ஒரே தரிசனத்தின்படி 1986ல் விஷ்வவாணி-யை ஸ்தாபித்ததன் மூலம் ஒரு புதிய சாதனையை புரிந்தார். இவர் ’தரிசனம் 2020’ என்ற தரிசனத்தை இந்திய சபைகலுக்கு கொடுத்து அதை பல மிஷனெரி ஸ்தாபனங்களும் ஆயிரமாயிரம் திருச்சபைகளும் ஏற்று துரிதமான வேளையில் ஈடுபட வழிவகுத்தார். எமில் அவர்களின் முழு வாழ்க்கையும் இந்திய சபைகளைத் தட்டி எழுப்பி மிஷனெரி வாஞ்சையாய் உருவாக்கி ஊக்குவிப்பதில் செலவிடப்பட்டது. அவர் எழுத்துக்களும் பாடிய பாடல்களும் இன்றும் இந்திய சபைகளை உயிர்ப்பித்தும் மக்களின் வாழ்க்கையை கிறிஸ்துவுக்குள் செழிப்படையவும் செய்து வருகிறது.

(நன்றி: 101 பாடல் பிறந்த கதை)

சம்பவ விளக்கம்

தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்

அன்பார்ந்தவர்களே,  சபையானது கர்த்தரை ஆராதித்து மகிமைப்படுத்தி போற்றி புகழுகிற இடமாய் இருக்கிறது. அங்கே கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பது மட்டுமல்ல, அங்கே சுவிசேஷகர்கள் எழும்புகிறார்கள் ஜெபவீரர்கள் எழும்புகிறார்கள். கர்த்தரே தேவன் என்று நிரூபிக்க பக்தி வைராக்கியத்தோடு புறப்படுகிறார்கள்.

வேதம் சொல்லுகிறது “இதோ சகோதரர் ஒருமித்து வசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்க்தனை இன்பமுமானது?!” (சங். 133:1.) ”தேவனை துதித்து ஜனங்கள் எல்லாரிடத்திலும் தயவு பெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்து கொண்டுவந்தார் ” (அப். 2:47). சபையில் பலவிதமான விசுவாசிகள், இரட்சிக்கப்பட்டவர்கள் உண்டு. இரட்சிக்கபடாதவர்களும் உண்டு. உண்மை கிறிஸ்தவர்கள் உண்டு. பெயர் கிறிஸ்தவர்களும் உண்டு. அது ஒரு குடும்பம். தேவனுடைய வீடு. தேவனுடைய மந்தை. தேவனுடைய மாளிகை. உபதேசத்தில் வைராக்கியம் பாராட்டி கசப்புகளை வளர்க்காதிருங்கள். யாவரோடும் சமாதானமாயிருங்கள்.

ஒரு பக்தன் சொன்னார் “கர்த்தர் உலகத்தில் சபையை ஸ்தாபித்தார். ஆனால் சபைக்குள் உலகம் வந்துவிட்டது. கப்பல் தண்ணீருக்குள் தான் இருக்கிறது. ஆனால் தண்ணீர் கப்பலுக்குள் வந்துவிடக்கூடாது.” தேவனுடைய பிள்ளைகளின் நோக்கமெல்லாம் நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் மக்களை விடுவித்து அவர்களை பரலோகத்தில் கொண்டுவந்து சேர்க்கவேண்டும் என்பதாக இருக்கட்டும். கர்த்தர் அன்போடு வாக்குத்தத்தம் கொடுக்கிறார். “இந்தக் கல்லின் மேல் என் சபையை கட்டுவேன். பாதாலத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை. (மத். 16:18) கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!!

Person: எமில் ஜெபசிங்

நன்றி: தரிசனக்குரல் (11.06.2017)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami