முன் செல்லும் கர்த்தர்!

தலைப்பு வசனம்

“உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே எகிப்தில் உங்களோடிருந்து, உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்ததெல்லாவற்றைப்போலவும், உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். The Lord your God, who goes before you, He will fight for you, according to all He did for you in Egypt before your eyes.” Deuteronomy 1:30

உண்மை சம்பவம்

“ஆண்டவர் நல்லவராம்! என்னை நேசிப்பவராம்! கை விடவே மாட்டாராம்! இப்படிக் கூறும் வேக புத்தகத்தை நான் நம்ப வேண்டுமாம்!”. பொங்கி எழும் தன் உள்ளக் குமுறலின் உணர்ச்சி அலைகளோடு போராடிக் கொண்டிருந்தாள் வாலிப பெண்ணான மேரி பேக்கர். மேரி பேக்கரின் பெற்றோர் எலும்புருக்கி நோயாளிகள். அவளது தம்பியையும் தங்கையையும் வளர்க்கும் பொறுப்பை மேரியின் கரத்தில் கொடுத்துவிட்டு, சீக்கிரமே மரித்துப் போனார்கள்.

அமெரிக்காவின் சிக்காகோ மாநகரில் தனது கடின உழைப்பினால் குடும்பத்தைப் பராமரித்து வந்தாள் மேரி. இந்த வாலிபப் பெண்ணின் வாழ்வில் மற்றுமொரு சூறாவளி! அவளுடைய அருமைத் தம்பியையும் எலும்புருக்கி நோய் தாக்கியது. எப்படியாவது தன் ஒரே தம்பியைக் காப்பாற்ற வேண்டுமென மேரி முயற்சித்தாள்.

முன் செல்லும் கர்த்தர்

தென் அமெரிக்காவில் உள்ள பிளாரிடாவின் சூரிய ஒளியும், வெப்ப நிலை யும் அவனைச் சீக்கிரம் குணமாக்கும் எனப் பலர் ஆலோசனை கூறினர். எனவே, தன்னால் சேமிக்க முடிந்த பணமனைத்தையும் சேர்த்து, தன் தம்பியை அங்கு அனுப்பி வைத்தாள். ஆனால், பிளாரிடாவில் தம்பியின் உடல்நிலை சில நாட்களுக்குள் மிகவும் மோசமடைந்தது. அயராது உழைத்த மேரியோ சிக்காகோவில் சுகவீனமானாள். எனவே, மேரிக்கு பிளாரிடா செல்ல பெலனுமில்லை; பணமுமில்லை.

இரு வாரங்களில் அவள் நேசித்த ஒரே தம்பி ஆயிரம் மைல்களுக்கப்பால் தனிமையில் அனாதையாய் மரித்துப் போனான். பயணச் செலவுக்கும் பணமில்லாததால் தன் தம்பியின் சடலத்தைப் பார்க்கவோ, அடக்க ஆராதனையில் கலந்துகொள்ளவோ மேரியால் முடியவில்லை. தவித்துப் புலம்பினாள். மேரி ஒரு கிறிஸ்தவள் தான், ஆனால், அவளது வாலிப வயதில் தொடர்ந்து புயல் போல் தாக்கிய இச்சோதனைகளால் மனக்கசப்பு அடைந்தாள். தேவனின் அன்பு, பராமரிப்பு என்பவற்றை நம்ப, அவள் உள்ளம் மறுத்தது. அவரையே வெறுக்குமளவிற்கு எதிர்ப்புணர்ச்சி தலை தூக்கியது. அமைதியின்றி, வேதனையுற்ற அவள் உள்ளம் அலை மோதியது.

அந்நிலையில், தன்னோடு மெல்லிய சத்தத்தில் பேசும் ஆண்டவரின் அன்புக்குரலை மேரி கேட்டாள். அதன் பின்னர், ஒரு புதிய ஆழமான சமாதானத்தையும், நல் நம்பிக்கையையும் அடைந்தாள். சில வாரங்கள் சென்றபின், அவளது ஆலயப் போதகர் டாக்டர் பால்மர் மேரியைச் சந்தித்தார்.

ஆலய ஞாயிறு பள்ளியில் போதிக்கப்படும் சில பாடங்களின் கருத்தமைந்த பாடல்களை அவள் எழுத வேண்டுமென்று கேட்டார். அப்பாடங்களில் ஒன்று “இயேசு புயலை அமர்த்தும் சம்பவம்” இத்தலைப்பில் பாடலை எழுதத் துவங்கிய மேரி பேக்கர், அந்நிகழ்ச்சியைத் தன் வாழ்வின் அனுபவ சாட்சியாகவே உணர்ந்து எழுதினாள். தன் உள்ளத்தில் வீசிய புயலை, ஆண்டவர் எவ்வாறு அற்புதமாக அமைதியாக்கினார், என்ற மேரி பேக்கரின் இந்த சாட்சிப் பாடல் அனேகரின் வாழ்க்கைப் புயலில் அமைதியையும், ஆறுதலையும் இன்றும் அளிக்கின்றது. இதோ அந்தப் பாடலின் சில வரிகள் பின்வருமாறு பார்க்கலாம்:

ஆண்டவா புயல் வீசிடுதே
அலைகளும் பொங்குதே,
கார்மேகத்தால் வானம் இருண்டதே
புகலிடமில்லையே
மாள்கிறோம்; கவலையின்றி
உறங்கலாமோ நீர்?
ஒவ்வோர் கணமும் திகில் சூழ்ந்திடுதே
ஆழ் கடலில் ஆழ்வோமோ?

(நன்றி: 101 பாடல் பிறந்த கதை)

சம்பவ விளக்கம்

முன் செல்லும் கர்த்தர்

அன்பார்ந்தவர்களே,  ஊக்கமான ஜெப ஜீவியத்திற்கு தேவ சமூகமும், தேவ பிரசன்னமும் மிக மிக அவசியம். ஜெபிக்கும் முன்பாக தேவ பிரசன்னத்தை எதிர்பாருங்கள். தேவ பிரசன்னத்தைக் கொண்டு வருகிற விதத்திலே கர்த்தரைத் துதித்து மகிமைப்படுத்தி பாடிப் போற்றுங்கள். அப்பொழுது துதிகளின் மத்தியிலே வாசம் பண்ணுகிறவர் இறங்கி வருவார். அவருடைய மகிமை இனிமையாய் உங்களை சூழ்ந்து கொள்ளும். அப்பொழுது தேவ சமுகத்தின் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள்.

சவுலுக்கு இருந்த பொல்லாத ஆவியை துரத்த வேண்டுமென்றால் தேவ பிரசன்னம் இறங்கி வர வேண்டும் என்று உணர்ந்த தாவீது தன் கின்னரத்தை எடுத்துப் பாட ஆரம்பிப்பார். தேவ பிரசன்னம் இறங்கி வருவதனால் சவுல் விடுதலிப் பெற்று சுகமடைவார். உங்களுடைய வாழ்க்கையில் இதை நீங்கள் உணர்ந்திருக்கிறீகளா? சில இடங்களில் முழங்கால் படியிட்ட உடனே தேவனுடைய பிரசன்னத்தை உணர முடியும். சில வீடுகளில் ஜெப ஆவியும், விண்ணப்பத்தின் ஆவியும் நிரம்பியிருக்கும். காரணம் அங்கே தேவ பிள்ளைகள் ஆராதித்து கர்த்தரைத் துதிப்பதால் அங்கே எப்பொழுதும் கர்த்தருடைய மகிமையின் பிரசன்னம் காணப்படும். ஆனால் சில வீடுகளில் இருளும் அந்தகாரமும் நிரம்பியிருக்கும். ஜெபிக்க முடியவில்லை.

ஆவியில் ஒரு போராட்டம், உள்ளத்தில் ஒரு கலக்கம். ஜெபிக்கிற ஜெபம் கூரையைத் தாண்டிப் போகவில்லை என்கிற உணர்வு. ஜெபிக்க வார்த்தைகளே வராது. தேவ பிள்ளைகளே, ஜெபிக்க ஆரம்பிக்கும் முன்னால் தேவ பிரசன்னத்தைக் கொண்டு வரும்படி கொஞ்ச நேரம் அவரை ஆராதியுங்கள். ஆவியானவரை வருந்தி அழைத்து அவரைப் பாடி மகிமைப்படுத்துங்கள். தேவ பிள்ளைகளே, கடந்த ஞாயிறு தேவசெய்தியில் கேட்டது போலவும், மேலே கூறப்பட்ட சம்பவத்தில் காண்கிற மேரி பேக்கரின் அனுபவத்தில் உணர்ந்ததைப் போலவும் நீங்கள் எதை இழந்துபோனாலும், தேவ பிரசன்னத்தை இழந்து போகாதேயுங்கள். தேவ பிரசன்னத்தை கெடுக்கிற பாவத்தையும், மீறுதல்களையும், துன்மார்க்கத்தையும், உங்களைவிட்டு அகற்றி அவ்வப்போது தேவ சமுகத்திலே உங்களை நிலைநிறுத்தி ஆராய்ந்து பாருங்கள். அப்பொழுது தெய்வீக சந்தோஷத்தையும் சமாதானத்தையும் உங்கள் உள்ளத்தில் பெறுவீர்கள். குடும்பத்திலும் ஆனந்தக்களிப்பு உண்டாயிருக்கும். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!!

Person: மேரி பேக்கர் நன்றி: தரிசனக்குரல் (02.09.2018)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami