சபையிலே மகிமை உண்டாவதாக!

தலைப்பு வசனம்

சபையிலே மகிமை உண்டாவதாக!

நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, Now to Him who is able to do exceedingly abundantly above all that we ask or think, according to the power that works in us, Ephesians 3:20

உண்மை சம்பவம்

1909ம் ஆண்டு துருக்கியிலும் சிரியாவிலும் ஒரு பெரிய படுகொலை நடந்துகொண்டிருந்த காலம். துருக்கியர்கள் படையாக வந்து ஒவ்வொரு கிராமத்தையும் கொள்ளையிட்டு அங்கிருந்தவர்களையெல்லாம் கொன்று குவித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களது கிராமத்திற்கும் வருகிறார்கள் என்று அறிந்த ஒரு கிராம மக்கள் தங்கள் பிள்ளைகள், பொருட்களுடன் வேறு இடத்திற்கு செல்ல தீர்மானித்தனர். ஆண்கள் பொருட்களையும் பெண்கள் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தனர். அந்த கிராமத்தின் போதகரோ அங்கிருந்த பிரசங்கமேடையில் பயன்படுத்தும் பெரிய பைபிளை எடுத்துக்கொண்டார். அந்த ஊரிலேயே அந்த ஒரு பைபிள் தான் இருந்தது. அந்த கிராமத்து மக்கள் அதை ஒரு பொக்கிஷமாகவே கருதினர். அதை டாக்டர் எலியாஸ் ரிக்ஸ் என்ற மிஷனெரி தன் மகளின் நினைவாக அந்த சபைக்கு கொடுத்திருந்தார்.

அவர்கள் சுமைகளுடன் நடக்க ஆரம்பித்தார்கள். வழியில் களைப்பினால் பலரும் தங்கள் சுமைகளில் சிலவற்றை வழியிலேயே போட்டுவிட்டு சென்றனர். பைபிளை தூக்கிக்கொண்டு நடக்கமுடியாது என்ற நிலைக்கு வந்த போதகர் வழியிலேயே அமர்ந்துவிட்டார். சிறிதுநேரம் எல்லாரும் யோசித்தார்கள். வேறுவழியில்லாமல் மிகுந்த துக்கத்தோடு அந்த பைபிளை அங்குள்ள ஒரு பாறையின் மீது வைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்கள். அந்த பாறை தங்கள் கண்ணைவிட்டு மறையும்வரை அவர்கள் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே முன்னேறிச் சென்றார்கள்.

சபையிலே மகிமை உண்டாவதாக!
சபையிலே மகிமை உண்டாவதாக!

இரவு நேரம் ஆனது. ஒரு தாய் தனது இரு பிள்ளைகளுடன் அந்த வழியில் நடந்துவந்தாள். இரு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு அவளால் அந்த கூட்டத்துடன் நடந்து வரமுடியவில்லை. அவள் சோர்ந்துபோய் வழியோரத்தில் அமரச் சென்றபோது ஏதோ தட்டுப்படுவதை உணர்ந்தாள். அதை எடுத்துப் பார்த்தபொழுது அவளால் நம்பவேமுடியவில்லை. கிராமமே பொக்கிஷமாக கருதும் பைபிள் எப்படி இங்கே விடப்பட்டிருக்கிறது என்று நினைத்தாள். உடனே ஒரு தீர்மானம் செய்தாள். குழந்தைகளுக்கு வைக்கப்பட்டிருந்த போர்வைகளை அந்த பாறையின்மீது வைத்துவிட்டு பைபிளை தன் கையில் எடுத்துக்கொண்டாள். மெதுவாக நடந்து அருகில் உள்ள கிராமத்திற்கு வந்தாள்.

அங்கு வந்துப் பார்த்தபொழுது கிராமமே இரத்தக்காடாய் கிடந்தது. துருக்கியர்கள் ஏற்கனவே அந்த கிராமத்திற்கு வந்துவிட்டனர். ஆண்கள் எல்லாரையும் ஒரு கிடங்கில் அடைத்துவைத்திருந்தனர். பெண்களும் குழந்தைகளும் ஒரு ஆலயத்தில் ஒளிந்துக்கொண்டிருந்தனர். அவர்கள் இந்த தாயையும் பிள்ளைகளையும் உள்ளே ஏற்றுக்கொண்டனர். உள்ளே மிகவும் இருட்டாயிருந்தது. எல்லாரும் மிகவும் நெருக்கிக்கொண்டு அமர்ந்திருந்தனர். அப்பொழுது இந்த தாய் தன்னிடம் அந்த கிராமத்தின் பைபிள் இருப்பதாக கூறினாள். அந்த செய்தி மிகவும் மெல்லிய சத்தத்தில் அங்கிருந்த எல்லாருக்கும் அறிவிக்கப்பட்டது. அவர்களுக்குள் ஒரு புது உற்சாகம் பிறந்தது.

ஒரு பெண் தன்னிடம் மெழுகுவர்த்தி இருப்பதாக கூறினாள். வேறொரு பெண் தன்னிடம் உள்ள தீப்பெட்டியைக் கொடுத்தாள். அந்த தாய் மெழுகுவர்த்தியைக் கொண்டு வேதத்தை அங்கிருக்கும் அனைவருக்கும் மெல்லிய சத்தத்தில் வாசிக்கத் தொடங்கினாள். “இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும் மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்திற்கும் பயப்படாதிருப்பாய். உன் பக்கத்தில் ஆயிரம் பேரும் உன் வலதுபுறத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும் அது உன்னை அணுகாது.” என்று வாசித்தாள். எல்லாருடைய மனதிலும் அந்த வசனங்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. இருந்தாலும் எந்நேரமும் கதவு உடைக்கப்படலாம் என பயந்துகொண்டிருந்தார்கள். இரண்டு நாட்கள் இதே நிலையில் அவர்கள் உள்ளே அடைந்துகிடந்தார்கள். வசனம் மட்டுமே அவர்களுக்கு துணையாய் இருந்தது.

அவர்கள் வெளியே வந்து பார்த்தபொழுது எதிரிப்படையினர் யாரும் அங்கே இல்லை. காயப்பட்டிருந்த ஆண்கள் மட்டும் அங்கே இருந்தார்கள். அதில் ஒருவர் சொன்னார், ”துருக்கியர்கள் இந்த ஆலயத்தை எரித்துவிட எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் அவர்களை ஒரு வல்லமை தடுத்துக்கொண்டிருந்தது. அவர்கள் கடைசியில் சோர்ந்துபோய் இங்கிருந்து கிளம்பிவிட்டனர்.” உடனே எல்லாப் பெண்களும் மகிழ்ச்சியாய் தேவன் செய்த அற்புதத்தையும், பைபிள் அவர்களுக்கு கொடுத்த விசுவாசத்தையும் எடுத்துக் கூறினார். எல்லாரும் இணைந்து தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

(நன்றி: 40 மிஷனெரி சம்பவங்கள்)

சம்பவ விளக்கம்

சபையிலே மகிமை உண்டாவதாக!

அன்பார்ந்தவர்களே,  எருசலேமிலுள்ள தேவாலயம் தற்போது இல்லை. தேவன் உருவாக்கிய ஆலயம் வெளிப்பட்டபோது மனிதன் உருவாக்கிய தேவாலயம் இல்லாமற் போயிற்று. நாம் புதிய ஏற்பாட்டின் நடமாடும் சபைகள். கர்த்தராகிய இயேசு சொன்னார் “நான் சபையைக் கட்டுவேன்” (மத். 16:18). அவருடைய வார்த்தை உண்மை. பெந்தேகோஸ்தே நாள்முதல் அவர் அவருடைய சபையைக் கட்டிக்கொண்டிருக்கிறார். சத்துருவிடமிருந்து உபத்திரவங்களும், பயமுறுத்தல்களும் ஏற்பட்ட போதிலும் இந்நாள் வரை அது நிறுத்தப்படவில்லை.

நாம் அப். 2:47ல் வாசிக்கிறோம் “இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்”. அப். 5:14 மேலும் சொல்கிறது “விசுவாசிகள் கர்த்தரிடமாக அதிகமதிகமாக சேர்க்கப்பட்டார்கள். சபை கிறிஸ்துவின் சரீரமாகவும் நாம் அதின் அங்கத்தினராகவும் இருக்கிறோம். ஒவ்வொரு அங்கத்தினர்களும் சிறியவராய் இருந்தாலும் பெரியவராய் இருந்தாலும் எல்லாருக்கும் முக்கிய பங்குண்டு.

நாம் அனைவரும் ஒரு மேய்ப்பனின் கீழ் ஒரு மந்தையாய் இருக்க வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். அவர் கிறிஸ்தவர்களிடம் பிரிவையோ, பல சபை பிரிவுகளையோ கொண்டு வர இரத்தம் சிந்தவில்லை.கடந்த ஞாயிறு தேவ செய்தியில் கேட்டது போல வெளிப்படுத்தல் புஸ்தகத்திலுள்ள சபைகளுக்கான கடிதங்களை படித்து, நாம் தவறுதலாய் எங்கே போய் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் சோதித்தறிவோம். நம் ஹேவனிடம் மன்னிப்பு கேட்போம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!!

நன்றி: தரிசனக்குரல் (12.06.2016)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami