தாழ்மையே மேன்மை!

தலைப்பு வசனம்

தாழ்மையே மேன்மை

கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை. The fear of the Lord is the instruction of wisdom, And before honor is humility. Proverbs 15:33

உண்மை சம்பவம்

இங்கிலாந்து தேசத்து மாமன்னர் நான்காம் வில்லியம் மரித்த இரவு நேரம் பட்டத்திற்கு வர வேண்டிய இளவரசியான ஒரு சிறுமி அரண்மனையின் மற்றொரு அறையில் துயில் கொண்டிருந்தாள். அவளை தூக்கத்திலிருந்து எழுப்பி “இங்கிலாந்து அரசியாரே வாழ்க!” என்று வாழ்த்தினார்கள். உடனே சிறுபெண்ணாய் இருந்த இளவரசி தன்னருகில் இருந்த வேதாகமத்தை எடுத்துக் கொண்டு, படுக்கையருகில் முழங்காற்படியிட்டு தனது நாட்டை ஆளும் பெரிய பொறுப்புக்குத் தேவையான ஞானம், பலம், வழிநடத்துதலை அருளும்படி பரமபிதாவிடம் வேண்டுதல் செய்தாள். அந்த இளவரசி தான் விக்டோரியா மகாராணியாக முடிசூட்டப்பட்டு அறுபத்து நான்கு ஆண்டுகள் இங்கிலாந்து தேசத்தை சிறப்புடன் அரசாட்சி செய்து வந்தாள்.

தேவப் பயமும், பக்தியும் உடையவளாயிருந்த இந்த விக்டோரியா மகாராணியின் காலத்தில் இங்கிலாந்து நாடு எல்லா வழிகளிலும் முன்னேற்றமும், புகழும் பெற்று விளங்கியது என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஒரு சமயம் மகாராணியை சந்திக்க வந்த இந்தியாவின் சிற்றரசர் (சுதேச மன்னர்) ஒருவர் “அரசியாரே தங்கள் நாடு உலகில் புகழும், செல்வாக்கும் மிக்கதாக விளங்குவதன் ரகசியம் என்ன?” என்று கேட்டார். உடனே அரசியார், தயக்கமின்றி தமது சத்திய வேதாகமத்தை எடுத்து உயர்த்திக் காட்டி “இதுவே அதன் ரகசியம்” என்று கூறி அனைவரையும் மகிழ்வித்தார்கள்.

தாழ்மையே மேன்மை!
தாழ்மையே மேன்மை!

மற்றுமொரு சம்பவத்தைப் பார்ப்போம். கிரிம்சன் யுத்தத்தில் வெற்றி பெற்றதைக் கொண்டாட இங்கிலாந்தில் ஒரு வெற்றி விழா நடந்தது. அதில் காயப்பட்டு வெற்றி சம்பாதித்த ஒப்பற்ற போர் வீரர்களுக்கு பாராட்டு வுழாவும் நடந்தது. விக்டோரியா அரசியாரே அந்த பெரிய வீரர்களைப் பாராட்டி தங்கப் பதக்கம் அளிக்கும்படி வந்திருந்தார். காயப்பட்ட உடலுடனும், கட்டுகளுடனும் சிலர் தங்கப்பதக்கம் வாங்க வந்தனர். சிலர் ஊன்றுகோல்களுடன் வந்தனர். ஒவ்வொருவரையும் இனிய புன்னகையோடு கைகுலுக்கி அவர்களுக்கு தங்கப்பதக்கம் அணிவித்தார். இறுதியாக போரில் தனது கரங்களையும், கால்களையும் இழந்திருந்த ஒரு போர் வீரனை தூக்குப் பலகையில் வைத்து தூக்கிக் கொண்டு வந்து அரசியார் முன் வைத்தனர். தன் நாட்டிற்காக இந்த தியாகத்தைச் செய்த அவ்வீரனை கண்டவுடன் அரசியாரின் கண்களில் கண்ணீர் வடிந்தது. அவனுடைய ஆடையில் தங்கப் பதக்கத்தை அணிவித்து அவனை நெற்றியில் முத்தமிட்டு, “நல்லது உத்தமும் உண்மையுமுள்ள போர் வீரனே!” என்று பாராட்டி அந்த போர்வீரனை கௌரவப்படுத்தினார்.

விக்டோரியா ராணி சில நேரங்களில் லண்டனில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கு செல்வது வழக்கம். ஒருமுறை அவர்கள் வயதான பெண்மணியின் வீட்டிற்கு தேநீர் அருந்தும்படி சென்றிருந்தார்கள். ராணி திரும்ப புறப்பட எழுந்தபொழுது அவர்கள் அப்பெண்ணிடம் கேட்டார்கள் “நான் உங்களுக்கு செய்ய முடிந்தது ஏதாகிலும் உள்ளதா?” அத்துடன் அப்பெண்மணி பதிலாக “ஆம் மாட்சிமை தங்கிய அரசியார் அவர்களே!, நீங்கள் என்னை பரலோகில் சந்திப்பீர்கள் அல்லவா?” அதற்கு ராணி திரும்பி பெண்ணிடம் மென்மையாக கூறினார்கள், “ஆம், நான் அங்கே இருப்பேன். அது உங்களுக்காகவும் எனக்காகவும் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலேயே அப்படி ஆகும்” என்று கூறினார்.

(நன்றி: சாரோனின் ரோஜா )

சம்பவ விளக்கம்

தாழ்மையே மேன்மை

அன்பார்ந்தவர்களே, தேவன் நம்மை உயர்த்துமுன் நம் நிலை தாழ்ந்ததாக இருந்திருக்கலாம். நல்ல உடைகளை அவர் நமக்கு உடுத்துவிக்குமுன்னர், நாம் கந்தைகளை உடுத்தியிருக்கலாம். அவர் தமது கிருபையால் நம்மை நிரப்புமுன், நாம் வெறுமையாக இருந்திருக்கலாம். பிரபுக்களுக்கு சமமாக நம்மை உயர்த்துவதற்கு, நாம் தாழ்மையாய் இருக்க வேண்டும் என்கிறார். அவர் பெலவீனருக்கு பெலன் கொடுத்து ஏழைகளை ஆதரிக்கிறார். குற்றவாளியையே அவர் நீதிமானாக்க விரும்புகிறார். தகுதியற்றவர்களை தகுதியாக்கி தம்முடைய மகிமையால் முடிசூட்டுவார். நாம் கடந்த ஞாயிறு தேவசெய்தியில் கேட்டது போல நாம் தாழ்வில் இருந்தால் தான் உயர்த்தப்படுவோம். யாவற்றையும் நமது உடைமையாக்க வேண்டுமானால், நாம் யாதுமற்றவர்களாய் இருக்க வேண்டும். தேவன், நாம் வெறுமையாய் இருந்தால்தான் நம்மை நன்மைகளால் நிரப்புவார். தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார்.

யோசேப்பு பார்வோனுக்கு அடுத்த இடத்திற்கு வரவேண்டுமானால், அவன் சிறையில் வாட வேண்டும். தாவீது இஸ்ரவேலின் மன்னனாவதற்கு முன்னால், பறவையைப் போல வேட்டையாட பட வேண்டும். பவுல் சிறந்த அப்போஸ்தலனாவதற்கு முன்னால் தன்னை பாவி என்று ஒப்புக்கொள்ள வேண்டும். இதுதான் தேவனுடைய முறை. இப்பொழுது உலகில் தாழ்வாக எண்ணப்படும் பரிசுத்தவான்களே பிதாவின் ஆட்சியில் சூரியனைப் போல ஒளிவீசுவார்கள்.

பிரியாமனவர்களே, நீங்கள் தாழ்ந்திருக்கிறாய் என்று அஞ்சாதிருங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்திருக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உயர்த்தப்படுவீர்கள். எவ்வளவுக்கெவ்வளவு துக்கிக்கிறீகளோ, அவ்வளவுக்கவ்வளவு மகிழ்ச்சியடைவீர்கள். உங்களைக் குறித்தும் உங்கள் பிள்ளைகளைக் குறித்தும் பெருமையாகப் பேசாதிருங்கள். தேவனுக்கென்று நீங்கள் கொடுக்கும் தசமபாகத்தையும், பிறருக்கு செய்யும் உதவிகளையும், தேவனுடைய இராஜ்ஜியத்திற்கென்று நீங்கள் செய்யும் காரியங்களைக்குறித்தும் பேசாதிருங்கள். மற்றவர்களுக்கு உதவும்படி தேவன் கொடுத்த நல்வாய்ப்புகளுக்காக இயேசுவுக்கு நன்றி கூறி, தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள். அப்பொழுது இயேசு உங்களை ஆசீர்வதித்து, மற்றவர்களுக்கு முன்பாக உங்களை உயர்த்துவார். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!!

நன்றி: தரிசனக்குரல் (14.02.2016)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami